Fahadh Faasil - புஷ்பா 2.. மிரட்டல் லுக்கில் ஃபகத் பாசில்.. பிறந்தநாள் கிஃப்ட்
சென்னை: Fahadh Faasil Birthday (ஃபகத் பாசில் பிறந்தநாள்) ஃபகத் பாசில் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தில் அவரது லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

புஷ்பா 2 ஷூட்டிங்: புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் ஷூட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில்கூட ஃபகத் பாசிலுக்கான போர்ஷன் ஷூட்டிங்கில் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாய் பல்லவி: புஷ்பா 2 திரைப்படத்தில் சாய் பல்லவி நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக சாய் பல்லவி இருப்பார் எனவும், இதற்காக அவர் பத்து நாள்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் என கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க புஷ்பா 2 படத்தின் டீசர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டீசரை பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயம் மெகா ஹிட்டாகும் என ஆரூடம் கூறிவருகின்றனர்.

ஃபகத் பாசில் பிறந்தநாள்: புஷ்பா 2 படத்தில் நடித்துவரும் ஃபகத் பாசில் இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் ஃபகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தில் அவரது லுக் தொடர்பான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மொட்டை தலையுடன் வாயில் சிகரெட்டுடன் மாஸாக நடந்துவருவதுபோல் இருக்கிறது. இந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ஆட்டம் போடும் நடிகை: முன்னதாக படத்தில் ஒரு பாடலில் ஆடுவதற்கு சமந்தா நோ சொன்னதை அடுத்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக பல நடிகைகளிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடந்த்திவந்தது. இந்தச் சூழலில் பிரபல நடிகை ஸ்ரீலீலா பாடலுக்கு நடனம் ஆடியிருப்பதாக கூறப்படுகிறது. இவர் கன்னடத்தில் கிஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.அதன் பிறகு கன்னடம் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக திகழ்ந்துவருகிறார். அவரது நடிப்பில் மட்டும் தற்போது 6 தெலுங்கு படங்கள் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











