Fahadh Faasil - உங்க சங்காத்தமே வேண்டாம் ஆள விடுங்க.. கவர் ஃபோட்டோவை நீக்கிய ஃபகத் பாசில்
சென்னை: Fahadh Faasil (ஃபகத் பாசில்) நடிகர் ஃபகத் பாசில் ரத்தினவேலு கெட் அப்பில் இருக்கும் புகைப்படத்தை கவர் ஃபோட்டாவாக வைத்திருந்தார்.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை எடுத்திருக்கிறார் ஃபகத் பாசில். அலட்டல் இல்லாமல் தனது கண்களை வைத்துக்கொண்டே உடன் நடிப்பவர்களை தாண்டி ஸ்கோர் செய்துவிடும் வல்லமை ஃபகத்துக்கு இருக்கிறது. இதன் காரணமாக பல மொழிகளிலும் அவரால் தடம் பதிக்க முடிகிறது. அவருக்கென்று பெண் ரசிகைகள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

தெலுங்கில்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் பன்வர் சிங் செகாவாட் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக அவரது லுக் வித்தியாசமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினர். படத்தின் இரண்டாவது பாகத்திலும் கமிட்டாகியிருக்கும் ஃபகத் சமீபத்தில்தான் தனது போர்ஷன் ஷூட்டிங்கை முடித்தார்.
விக்ரம் அமர்: அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் அமர்நாத் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தப் படத்தில் தன்னுடைய அசால்ட்டான நடிப்பால் அப்ளாஸை அள்ளினார். குறிப்பாக இடைவேளை காட்சியில் கமலிடம் பேசும்போதும், தனது மனைவியை கொன்றவரிடம் என் கண்ணை பாரு என சொல்லும் இடத்திலும் தான் எவ்வளவு பெரிய நடிகன் என்பதை உணர்த்தியிருந்தார்.
மாமன்னன் ஃபகத்: அவரது கரியர் பெஸ்ட்டாக மாமன்னன் படம் அமைந்திருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படத்தில் ரத்னவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாதி திமிர் உள்ளவராக எந்த அலப்பறை போட்டு கத்தி எதுவும் பேசாமல் சின்ன சின்ன கண் அசைவுகளாலும் தனது அசுரத்தனமாக நடிப்பாலும் மிரட்டியிருந்தார்.

ட்ரெண்டிங்கில் ஃபகத்: இந்தச் சூழலில் மாமன்னன் படம் சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக சாதி வெறி கொண்டவராக காட்சிபடுத்தப்பட்டிருந்த ரத்தினவேலு கதாபாத்திரத்தின் வீடியோக்களில் பல பாடல்களை ஒட்டி தங்கள் இஷ்டத்துக்கு பகிர்ந்துவந்தனர் சிலர். அதனைப் பார்த்த பலரும் இது ஆரோக்கியமான போக்கே இல்லை என விமர்சித்தனர்.
கவர் ஃபோட்டோ: இந்நிலையில் இங்கு நடக்கும் கலவரங்கள் எதுவும் தெரியாமல் ரத்தினவேலு கெட் அப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது முகநூல் கவர் ஃபோட்டோவாக வைத்தார் ஃபகத் பாசில். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் நடந்த களேபரங்கள் அவர் காதுக்கு சென்றிருக்கும் போல. எனவே வைத்திருந்த கவர் ஃபோட்டோவை நீக்கிவிட்டார் ஃபகத் பாசில்.


Click it and Unblock the Notifications











