ரொம்ப நாளா ரிலீசுக்கு வெயிட்டிங்... மாலிக் படத்தையும் ஓடிடியில ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்

கொச்சி : மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் தனக்கென தனிப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் பகத் பாசில்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் படம் கடந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிட் படங்களை கொடுத்தவர்

ஹிட் படங்களை கொடுத்தவர்

மலையாளப் படங்களில் மாஸ் காட்டி வருபவர் நடிகர் பகத் பாசில். தொடர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தமிழிலும் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன்மூலம் தனக்கென சிறப்பான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார். தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

ரிலீஸ் தள்ளிப்போன மாலிக்

ரிலீஸ் தள்ளிப்போன மாலிக்

இந்நிலையில் இவரது மாலிக் படம் கடந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மத அரசியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், கொரோனா மற்றும் அது தொடர்பான லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Sunny Leone செய்யும் உதவி குவியும் பாராட்டு | அமைதியா உதவும் Suriya
பேச்சுவார்த்தையில் தயாரிப்பு தரப்பு

பேச்சுவார்த்தையில் தயாரிப்பு தரப்பு

இதனிடையே இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்புக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் அறிவித்துள்ளார். கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத அரசியலை பேசும் படம்

மத அரசியலை பேசும் படம்

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இரு மதத்தினரிடையே குறிப்பாக முஸ்லீம்கள் குறித்து அதிகமாக பேசியிருக்கிறது. மத அரசியலை மிகவும் நுட்பமாக பேசியுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் சிறப்பான வரவேற்பை பெறும் என்று திட்டமிட்டிருந்த தயாரிப்பு தரப்பு தற்போது வேறு வழியின்றி ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X