ஆஹா என்னா மாற்றம்... என்னா தோற்றம்... அநியாயத்துக்கு ஒல்லிப்பிச்சான் ஆன நஸ்ரியாவின் கணவர்!
சென்னை: மலையாள படத்துக்காக, நடிகை பகத் பாசில் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
பிரபல மலையாள இயக்குனர் பாசில். இவர் தமிழில், ஒரு நாள் ஒரு கனவு, கண்ணுக்குள் நிலவு, விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, கிளிபேச்சுக் கேட்கவா, வருஷம் 16, பூவிழி வாசலிலே, பூவே பூச்சூடவா உட்பட பல ஹிட் படங்களை இயக்கியவர்.
இவரது மகன் பகத் பாசில். மலையாள நடிகரான இவர், தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்திருந்தார்.

நஸ்ரியா கணவர்
பிரபல நடிகை நஸ்ரியாவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பகத், இப்போது மாலிக் என்ற படத்தில் நடித்துவருகிறார். உண்மைக் கதையான இந்த படத்தில் 20 வயதில் இருந்து 57 வயது வரை உள்ள தோற்றத்தில் நடிக்கிறார் பகத்.

லீ வொயிட்டேகர்
படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் லீ வொயிட்டேகர் பணியாற்றுகிறார்.

பகத் பாசில் தோற்றம்
இந்தப் பட கேரக்டருக்காக, அநியாயத்துக்கு ஸ்லிமாகியுள்ள பகத் பாசிலின் தோற்றம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Recommended Video

அடையாளம் தெரியாமல்
படத்துக்காக 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ள பகத் பாசில், அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே மாறியுள்ளார். மிகவும் ஒல்லியாக, சின்ன பையனைப் போல காட்சியளிக்கும் அவரை சமூக வலைத்தளங்களில், ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











