Fahadh Faasil: ரத்னவேல் கொடுத்த ஹைப்.. ரஜினிக்கே வில்லனாகும் பகத் ஃபாசில்.. எந்த படத்தில் தெரியுமா?
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் ரத்னவேல் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய பகத் ஃபாசில் அடுத்ததாக ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்கப் போவதாக ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் ஃபாசில் தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் மூலம் அறிமுகமானார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்த பகத் ஃபாசில் விக்ரம் படத்தில் அமர் எனும் அட்டகாசமான ரோலில் அதிரடி காட்டினார்.
டிரெண்டிங்கை தெறிக்கவிட்ட ரத்னவேலு: ஆனால், அமர் கதாபாத்திரத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ரவீணா ரவி உள்ளிட்ட பலர் நடித்த மாமன்னன் படத்தில் ரத்னவேலு கதாபாத்திரத்தில் மனுஷன் மிரட்டி எடுத்து விட்டார்.
தியேட்டரில் படம் வெளியான போது கூட டிரெண்டாகாத பகத் ஃபாசில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மாமன்னன் வெளியான நிலையில், இந்தியளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டது. மேலும், ஏகப்பட்ட வீடியோ மாஷ் அப்கள் ரத்னவேலு கதாபாத்திரத்தை வைத்து வெளியாகி மாமன்னன் படக்குழுவையே தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.
ரஜினிக்கு வில்லன்: இந்நிலையில், அடுத்ததாக தா.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக பகத் ஃபாசில் தான் நடிக்கப் போவதாக ஹாட் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

மாமன்னன் டிரெண்டிங் இருக்கும் போதே சூட்டோடு சூடாக இப்படியொரு செய்தி வெளியாகி இருக்கும் நிலையில், ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ரத்னவேல் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
ஹீரோவா நடிக்கணும்: விக்ரம் படத்தில் பகத் ஃபாசிலுக்கு பாசிட்டிவ் ரோல் கொடுக்கப்பட்டாலும், அவரை மட்டுமே ஹீரோவாக வைத்து தமிழில் படம் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதிலும், இயக்குநர் மாரி செல்வராஜே ரத்னவேல் எனும் தனிப் படத்தை தரமாக இயக்கினால் சூப்பராக இருக்கும் என அலப்பறைகள் எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











