Fahadh Faasil - இனி வில்லன் இல்லை ஹீரோதான்.. தமிழில் கதாநாயகனாகிறாரா ஃபகத் பாசில்?.. இயக்குநர் இவரா?
சென்னை: Fahadh Faasil (ஃபகத் பாசில்) தமிழ் சினிமாவில் ஃபகத் பாசில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் பகத் பாஸில். அவர் தற்போது இந்திய அளவில் பேமஸான நடிகராக இருக்கிறார். கையேதும் தூரத் படத்தின் மூலம் அறிமுகமான அவருக்கு ஆரம்பத்தில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்

கண்களால் நடிப்பு: கண்களால் நடிக்கும் ஹீரோக்கள் குறைந்து வரும் நேரத்தில் ஃபகத் பாசிலோ அதனை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார். எனவே அவரது நடிப்பை விட அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அலட்டல் இல்லாத நடிப்பு அவரது டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக மலையாளம் மட்டும் இன்றி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்
மாமன்னன்: வேலைக்காரன் படத்தில் வில்லனாக மிரட்டிய அவர் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடித்தார். அதனையடுத்து அவர் நடித்த மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் படத்தை இயக்கியிருந்தார். அதில் அவர் ரத்தினவேல் என்ற சாதி வெறி பிடித்த கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ஃபகத் பாசில். வில்லன் என்றாலே கத்தி பேச வேண்டும்; கத்தியால் வெட்ட வேண்டும் போன்ற டெம்ப்ளேட்டுகளை அசால்ட்டாக உடைத்து தனது மிரட்டலான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்து விட்டார்.
தலைவர் 170: தற்போது ரஜினிகாந்த் நடித்துவரும் தலைவர் 170ஆவது படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். த.செ.ஞானவேல் இயக்கும் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஃபகத் பாசில் வில்லனா அல்லது வேறு ஏதேனும் முக்கியமான ரோலில் நடிக்கிறாரா என்பது குறித்து தெரியவில்லை.
ஹீரோதான்: தமிழில் ஃபகத் பாசில் தொடர்ந்து வில்லனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும் அவரை ஹீரோவாக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ரசிகர்களிடம் இருக்கிறது. இந்நிலையில் தமிழில் ஃபகத் பாசில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை அரவிந்த் சாமி இயக்குகிறார் என்றும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











