பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பும் ஆவேசம்.. நான்கு நாளில் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: மலையாள திரைப்படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் திரைப்படம் பெரும் வசூல் அள்ளி வரலாற்று சாதனை படைத்த நிலையில், அந்த வரிசையில் ஃபஹத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தில் பகத் பாசிலின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ரோமன்சம் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ஆவேசம். இப்படத்தில், பகத் பாசில், ஹிப்ட்ஸர், மிதுன், ரோஷன் ஷநவாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார்.

ஆவேசம் திரைப்படம்: பெங்களூர் பொறியியல் கல்லூரியில் கேரளாவில் இருந்து மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு என்ற ஒரு கேங்கை அமைத்துக் கொண்டு ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு பொழுதை கழித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து கடுப்பான கல்லூரியின் சீனியர் மாணவர்கள் அவர்களுக்கு பல பிரச்சனைகளை தருகிறார்கள். இதை அந்த கேங்கில் உள்ள மூன்று மாணவர்கள் அந்த சீனியர்களை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள்.
படத்தின் கதை : இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மூன்று நபரையும் ஒரு ரூமில் அடைத்து வைத்து பயங்கரமாக தாக்கி துன்புறுத்துகிறார்கள். இதனால், ஆத்திரம் அடையும் ஜூனியர் மாணவர்கள் அந்த சீனியர்ளை அடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள். அப்போது தான் அந்த ஏரியா டான் பகத் பாசிலுடைய அறிமுகம் வருகிறது. இவருடைய நட்பு அந்த 3 மாணவர்களுக்கு கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த சீனியர்களை பகத் பாசில் அடிக்கவும் செய்கிறார். ஆனால், அந்த மூன்று மாணவர்களுக்கும் பகத் பாஸில் மூலமே பிரச்சனை வருகிறது. அது என்ன பிரச்சனை? அந்த பிரச்சனையை மாணவர்கள் எதிர்கொண்டார்களா? என்பதுதான் ஆவேசம் படத்தின் மிச்சக்கதை.
நான்காம் நாள் வசூல்: இத்திரைப்படம் ஏப்ரல் 11ந் தேதி தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளியது. இந்த படம் முதல் நாளில் இந்தியளவில் 3.65 கோடி வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக 3 கோடிகளை வசூல் செய்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் ஆவேசம் திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் உலகளவில் ரூ.45 கோடியாக உள்ளது. இந்த படத்தில், கல்லூரி மாணவர்கள் செய்யும் சேட்டை, அட்ராசிட்டியாக இருக்கிறது. பகத் பாசில் வழக்கம் போல பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











