கமலை பார்த்தா இந்த கேள்வியைத் தான் கேட்க விரும்புறேன்... பகத் பாசில் பளீச்
கொச்சி : நடிகர் பகத் பாசில் தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இவரது நடிப்பில் மாலிக் படம் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ள நிலையில் கமலுடன் விக்ரம் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்
இந்நிலையில் கமலை பார்த்தால் தான் கேட்க விரும்பும் கேள்வி குறித்து அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மிரட்டவுள்ள 5 வில்லன்கள்
நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படம் விக்ரம். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. கமலுக்கு இந்த படத்தில் நரேன், பகத் பாசில் உள்ளிட்ட ஐந்து வில்லன்கள் மிரட்ட உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அன்பறிவ் ஸ்டண்ட்
மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அன்பறிவ் ஸ்டண்ட் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதையடுத்து படத்தின் சண்டை காட்சிகள் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே எழத் துவங்கியுள்ளன. இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன.

பகத் பாசில் உற்சாகம்
படத்தின் முதல்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தில் கமலுக்கு வில்லனாகவுள்ள பகத் பாசில் கமலுடன் இணைந்து நடிப்பது குறித்து உற்சாகம் தெரிவித்துள்ளார். மேலும் கமலிடம் முதல் நாள் படப்பிடிப்பின்போது கேட்க விரும்பும் கேள்வி குறித்தும் அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பகத் பாசில் கேட்க விரும்பும் கேள்வி
கமலின் மைக்கேல் மதன காமராஜன், குருதிப்புனல், குணா என அனைத்து படங்களும் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்று தெரிவித்துள்ள பகத் பாசில், கமலை சந்தித்தால் உங்களால் மட்டும் எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது என்று கேட்க விரும்புவதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











