ராகவா லாரன்ஸ் வெளியேறிய நிலையில்.. லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லன் யார் தெரியுமா?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள விக்ரம் படத்தின் வில்லன் குறித்த ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் எனும் படத்தை இயக்க உள்ளார்.

விக்ரம் படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், தற்போது வில்லன் யார் என்பது தெரியவந்துள்ளது.

தேர்தல் ஓவர்

தேர்தல் ஓவர்

இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், தமிழக தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கினார் கமல்ஹாசன். சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தவறாமல் கலந்து கொண்டார். தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீண்டும் சினிமா பக்கம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் இயக்குநர்

மாஸ்டர் இயக்குநர்

கொரோனா பரவலில் இருந்து மீண்ட மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கும் பணியை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ரிசல்ட் அடுத்த மாதம் வர உள்ள நிலையில், படப்பிடிப்பு தொடங்குமா? இல்லை ரிசல்ட்டுக்கு பின் ஆரம்பிப்பார்களா? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

லாரன்ஸ் வெளியேற்றம்

லாரன்ஸ் வெளியேற்றம்

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிப்பார் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில பல காரணங்களுக்காக அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார். இந்நிலையில், கமலுக்கு வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

இவர் தான் வில்லன்

இவர் தான் வில்லன்

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடிக்க உள்ளார் என்கிற பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. ராஜ்கமல் தயாரிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க உள்ளேன் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் பகத் ஃபாசில் உறுதி செய்துள்ளார்.

Recommended Video

Chiyaan Vikram நடந்தே வந்து வாக்குபதிவு செலுத்தியுள்ளார் | Cobra, Election 2021
வில்லனாவே மாறிடுவார் போல

வில்லனாவே மாறிடுவார் போல

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இருந்து விஜய்சேதுபதி வெளியேறிய நிலையில், அந்த படத்தில் வில்லனாக ஒப்பந்தம் ஆனார் பகத் ஃபாசில். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் விக்ரம் படத்தில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், கமலுக்கும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஒரே அடியாக வில்லன் கதாபாத்திரங்களையே ஒப்புக் கொண்டு வருகிறாரே பகத் ஃபாசில் என்கிற பேச்சும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X