பலரின் கனவு வாய்ப்பு… இவருக்கு கிடைத்தது! ஆனால் தவறவிட்டுட்டாரே..!

நடிகர் ஃபகத் ஃபாஸில் பேட்ட திரைப்பட வாய்ப்பை தவறவிட்டுள்ளார்

சென்னை: பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் பகத் பாசில் இழந்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் பேட்ட. இப்படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக தயாராகிவருகிறது.

Fahadh Fassil was approached by Petta team!

விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் என பல நடிகர்கள் உள்ள நிலையில் தற்போது சசிகுமாரும் இணைந்துள்ளார். நடிகர் நடிகைகள் பலரும் ரஜினிகாந்துடன் நடிப்பதை மிகப்பெரியா அதிர்ஷடமாக பார்க்கின்றனர். ஆனால் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தும், அதை தவறவிட்டுள்ளார்.

மலையாள நடிகர் பகத் பாசிலை இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க முயற்சி நடந்ததாகவும், ஆனால் வேறு படத்தில் கால் ஷீட் இருந்ததனால் அவரால் நடிக்க முடியாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது.

பகத் பாசில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். எல்லோரும் நம்பக்கூடிய அப்பாவி முகத்தோடு மிரட்டும் வில்லனாக அவர் நடித்தது பெரிதும் பாராட்டப்பட்டது.

தற்போது பகத் பாசில் வரதன் என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக கும்பளங்கி நைட்ஸ், ட்ரான்ஸ் ஆனேன்கிலும் ஆளேன்கிலும் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன.

மலையாளத்தில் பிசியாக இருப்பதனால் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் திரைப்படத்திலும் அவர் நடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X