கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்?
ரஜினியின் புதிய படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலும் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என தெரிய வந்துள்ளது.
Recommended Video

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்தில், மலையாளத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்தது. விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

நண்பன்டா:
இந்நிலையில், மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பஹத் பாசில், இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ரஜினியின் நண்பராக பஹத் நடிப்பதாகக் கூறப்பட்டது.

சமுத்திரக்கனி:
சமீபகாலமாக ரஜினியின் படங்களில் அவருடனேயே வரும் நண்பன் கதாபாத்திரம் ஒன்று தவறாமல் இடம்பெற்று வருகிறது. கபாலி படத்தில் ஜான் விஜய், காலாவில் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் ரஜினியின் உயிர் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

எதிர்பார்ப்பு:
அந்தவகையில் ரஜினியின் இப்புதிய படத்தில் பஹத் அவரது நண்பராக நடிக்க இருக்கிறார் என்றும், எனவே படம் முழுவதும் அவர் ரஜினியுடன் இருப்பார் என்றும் கூறப்பட்டது. விரைவில் தொடங்க உள்ள இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் அவர் பங்கேற்பார் எனத் தகவல்கள் வெளியானது.

முற்றுப்புள்ளி:
ஆனால் இந்தத் தகவலை கார்த்திக் சுப்புராஜ் மறுத்துள்ளார். ரஜினி நடிக்கும் தனது புதிய படத்தில் பஹத் நடிக்கவில்லை என வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். முன்னதாக சிவகார்த்திக்கேயனின் வேலைக்காரன் படத்தில் ஸ்டைலிஷான வில்லனாக மிரட்டியிருந்தார் பஹத்.


Click it and Unblock the Notifications











