ஒரு மாதம் ஹனிமூன்: கிரீஸ், அமெரிக்கா செல்லும் நஸ்ரியா, பஹத் பாசில்

By Siva

திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியாவும், அவரது கணவர் பஹத் பாசிலும் தேனிலவுக்கு கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார்களாம்.

நடிகை நஸ்ரியா நடிக்க வந்த வேகத்தில் பிரபலம் ஆனார். பொண்ணு நல்லா நடிக்குது என்று கூறியவர்கள் வாயாலேயே அம்மாடி வம்பு பார்ட்டியாக உள்ளதே என்று சொல்ல வைத்தார்.

நடிக்க வந்த வேகத்திலேயே திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்

திருமணம்

கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி திருவனந்தபுரத்தில் நஸ்ரியாவுக்கும், பிரபல இயக்குனர் பாசிலின் மகனும், நடிகருமான பஹத் பாசிலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

மணி ரத்னம்

மணி ரத்னம்

பஹத் மலையாள படமான மணி ரத்னத்தில் நடித்து வருவதால் திருமணம் முடிந்த கையோடு அவரால் மனைவியை அழைத்துக் கொண்டு தேனிலவுக்கு செல்ல முடியவில்லை.

ஷூட்டிங்

ஷூட்டிங்

திருமணம் முடிந்த பிறகு பஹத் மணி ரத்னம் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். தற்போது அந்த படம் முடியபோவதால் புதுமணத் தம்பதி அடுத்த மாதம் தேனிலவுக்கு கிளம்ப முடிவு செய்துள்ளனர்.

கிரீஸ்

கிரீஸ்

நஸ்ரியாவும், பஹத்தும் தேனிலவுக்கு முதலில் கிரீஸுக்கு செல்கிறார்கள். அதன் பிறகு அமெரிக்கா செல்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு மாதம்

ஒரு மாதம்

நஸ்ரியா, பஹத் ஒரு மாத காலம் தேனிலவு கொண்டாடுகிறார்களாம். அதன் பிறகு நாடு திரும்பும் அவர்கள் மலையாள படம் ஒன்றில் ஜோடியாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X