ஓரக்கண்ணால சும்மா ஓரங்கட்டுரா... என்னா லுக்குடா இது சாமி!
சென்னை : இந்தியில் படு பிஸியாக படங்களை இயக்கி வரும் பிரபுதேவா தமிழில் பஹீரா என்ற திரைப்படத்தில் வித்தியாசமான சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் நடிகை அமைரா தஸ்தூர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அனேகன் படத்திற்கு பிறகு நீண்ட காலமாக தமிழில் நடிக்காமல் இருந்த இவருக்கு அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
இணையதளத்தை கலக்கும் எக்கச்சக்கமான புகைப்படங்களை வெளியிட்டு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் அமைரா தஸ்தூர் இப்போது ஓரக்கண்ணால் பார்த்து அனைவரையும் சாய்க்கும் கிக்கேற்றும் புகைப்படத்தை வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார்.

குங்ஃபூ யோகா
ஹிந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ள நடிகை அமைரா தஸ்தூர் ஜாக்கிஜான் நடிப்பில் உலக அளவில் பெரும் வசூலை வாரி குவித்த குங்ஃபூ யோகா திரைப்படத்தில் இந்திய வம்சாவளி பெண்ணாக நடித்து உலக அளவில் பிரபலமானவர்.

அடுத்தடுத்து இரண்டு படங்கள்
தமிழ் சினிமாவில் பொருத்தவரையிலும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே இதுவரை நடித்துள்ள அமைரா தஸ்தூர் நீண்ட காலமாக எந்த ஒரு திரைப் படங்களிலும் நடிக்காமல் தொடர்ந்து ஹிந்தியில் கவனம் செலுத்தி வர இப்போது அடுத்தடுத்து இரண்டு படங்கள் இவருக்கு வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ்குமார் ஜோடியாக
பாலிவுட்டில் படங்களை இயக்கிக் கொண்டு தமிழில் சில படங்களில் கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவா வித்தியாசமான திரில்லர் கதையில் நடித்திருக்கும் பஹீரா படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 7 கதாநாயகிகள் நடித்துள்ளனர் அதில் ஒரு கதாநாயகியாக அமைரா தஸ்தூர் நடித்துள்ளார் இதைத்தொடர்ந்து காதலைத்தேடி நித்யா நந்தா என்ற திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் ஜோடியாகவும் நடிக்க உள்ளார்.

கிளீன் போல்ட்
பால் போல பளபளப்பாக இருக்கும் தேகத்தில் சுண்டி இழுக்கும் கவர்ச்சியில் பார்க்க பார்க்க சலிக்காத கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் இப்பொழுது கருப்பு ட்ரான்ஸ்பரண்ட் உடையில் திரையின் மறைவில் நின்றுக்கொண்டு ஓரக்கண்ணால் லுக்கு விட்டு ஒண்டிக்கட்டை யாக வாழ்ந்து கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ் பசங்களை கிளீன் போல்ட் ஆக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











