ரஜினி எதிர்ப்பு எதிரொலி... ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ படப் பெயரை மாற்ற டைரக்டர் முடிவு

மும்பை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்' படத்தின் தலைப்பை மாற்ற அப்படத்தின் இயக்குநர் முடிவு செய்துள்ளார்.

பைசல் இயக்கத்தில் இந்தியில் தயாராகியுள்ள படம் ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்'. இப்படத்தின் தலைப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வழக்கு ஒன்றும் தொடர்ந்தார். அதில், சமுதாயத்தில் தனக்கு உள்ள நல்ல பெயர் உள்ளது என்றும், தனது அனுமதி பெறாமல் படத்திற்கு தன் பெயரை வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

Faisal Saif changes title of ‘Main Hoon Rajinikanth’ film

மேலும், இப்படத்திற்கு விலை மாது, செக்ஸ் என்றெல்லாம் படத்துக்கு விளம்பரபடுத்தப்பட்டு உள்ளது. இது சமூகத்தில் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இடைக்காலத் தடை...

இதையடுத்து அப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தில் ரஜினியை இழிவு படுத்தும் வகையில் தான் காட்சிகள் ஏதும் வைக்கவில்லை என விளக்கமளித்தார் அப்படத்தின் இயக்குநர் பைசல்.

பிரத்யேகக் காட்சி...

மேலும், இப்படத்தின் கதைக்கும், ரஜினி வாழ்க்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்த பைசல், ரஜினிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அப்படத்தைப் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்ட ஏற்பாடும் செய்தார்.

வக்கீல் மட்டும்...

ஆனால் ரஜினியோ அல்லது அவரது குடும்பத்தினரோ யாரும் அப்படத்தைப் பார்க்கச் செல்லவில்லை. ரஜினியின் வக்கீல் மட்டுமே அப்படத்தை பார்த்தார்.

படத்தலைப்பில் மாற்றம்...

இந்நிலையில் படத்தின் தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளார் பைசல். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘மெய்ன் ஹுன் ரஜினிகாந்த் படத்தில் தயாரிப்பாளர் நிறைய முதலீடு செய்துள்ளார். படத்தை வருகிற 17-ந்தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளோம்.

மெய்ன் ஹூன் ரஜினி...

படம் வெளிவராவிட்டால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் எனவே மெய்ன் ஹுன் ரஜினிகாந்த் தலைப்பை மெய்ன்ஹுன் ரஜினி என்று மாற்ற முடிவு செய்துள்ளோம்.

ரஜினியை புண்படுத்த விரும்பவில்லை...

ரஜினி மனதை புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இத்தலைப்பை ரஜினி ஏற்றுக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X