நடிகை ராதா கொடுத்த புகாரில் தப்பிய பைசூல், பெண் வக்கீல் கொடுத்த புகாரில் கைதானார்!!

By Shankar

சென்னை: நடிகை ராதா கொடுத்த செக்ஸ் மோசடி புகாரில் முன்ஜாமீன் பெற்று கடைசி வரை சிக்காமல் இருந்த தொழிலதிபர் பைசூல், ஒரு பெண் வக்கீல் கொடுத்த புகாரில் சிக்கி கைதாகியுள்ளார்.

சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் நடித்தவர் ராதா. சமீபத்தில் தொழில் அதிபர் பைசூல் மீது, தன்னை காதலித்து செக்ஸ் அனுபவித்துவிட்டு, திருமணம் செய்ய மறுப்பதாகவும், பணம் - நகைகளை மோசடி செய்ததாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

Faisul arrested on women layer's complaint

இந்த புகாரை போலீசார் விசாரிக்க ஆரம்பித்தபோதே, போலீசார் மீதும் எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை கூறினார் ராதா.

பைசூல் மற்றும் அவரைக் கைது செய்யத் தவறிய போலீசார் பற்றி தினசரி ஒரு பிரஸ் மீட் வைத்து பேட்டி கொடுத்து வந்தார்.

ஆனால் திடீரென்று விசாரணை நிலையில் இருந்த போதே, திடீரென வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்ற ராதா, பைசூல் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக எழுதிக் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்.

ஏம்மா இப்படி பண்ணீங்க என்று கேட்டதற்கு, "என்னதான் இருந்தாலும் பைசூல் எனது கணவர்தானே, எத்தனை நாள்தான் அவர் தலைமறைவாக இருப்பார்," என்றார்.

இந்தப் பல்டி முடிந்த சில தினங்களில், மீண்டும் ஒரு குட்டிக்கரணம் அடித்து பைசூல் மீது புகார் மனுவுடன் கமிஷனர் அலுவலகம் வந்தார் ராதா.

"பைசூல் என்னை மிரட்டினார், அதனால் வேறு வழியில்லாமல் நான் புகாரை வாபஸ் பெற்றேன். எனவே, பைசூல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் கண்ணீருடன்.

ஆனால் இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்ற யோசனையில் போலீசார் கிடப்பில் போட்டனர்.

ஆனால் இப்போது மீண்டும் இருவர் விவகாரமும் சூடு பிடித்துள்ளது.

பைசூலும் ராதாவும் நேற்று திருவல்லிக்கேணியில் நடுத்தெருவில் சண்டை போட்டுக் கொண்டனர்.

பைசூல் திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் ஒரு பகுதியில் மார்கரெட் என்ற பெண் வக்கீல் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக நேற்று மாலை ராதா வீட்டுக்கு வந்துள்ளார்.

ஆனால் பைசூல் அதை அனுமதிக்க மறுத்து தகராறு செய்துள்ளார்.

ராதாவை வீட்டுக்குள் விடாமல் நடுத் தெருவில் வைத்து, பைசூல் சண்டை போட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட, வீட்டுக்குள்ளிருந்த வக்கீல் மார்கரெட் வெளியில் வந்துள்ளார்.

என்னைப் பார்க்க வந்த ராதாவை நீங்கள் எப்படித் தடுக்கலாம்? என்று பைசூலைக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பைசூல், அவரிடமும் தகராறு செய்து மோசமான வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார்.

உடனே திருவல்லிக்கேணி போலீசில் புகார் செய்தார் மார்கரெட்.

உதவி கமிஷனர் பீர்முகமது, இன்ஸ் பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். ஆபாசமான வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் பைசூல் மீது வழக்கு பதிவு செய்து அவரை உடனே கைது செய்தனர்.

இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பைசூல்.

நடிகை ராதா கொடுத்த புகாரில்முன் ஜாமீன் பெற்று தப்பிக் கொண்டிருந்த பைசூல், பெண் வக்கீல் மார்கரெட் கொடுத்த புகாரில் கைதாகி ஜெயிலில் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X