விநாயகர் சதுர்த்தி நாளில் பைசல் இப்ராஹிம் ரய்ஸ் படத்துக்கு பூஜை

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் படத்தின் போஸ்டர் வெளியான நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்திற்கு படக்குழுவினர் பூஜை போட்டுள்ளனர். இப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இப்படம் ஹிட் அடிக்கவே, பலே பாண்டிய, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். ஜீவா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

Faizal Ibrahim Raiz Crew made Ganesh Pooja

2018ஆம் ஆண்டு அவர் நடித்து வெளியான திரைப்படம் தான் ராட்சசன். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து அவர் நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் "ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் (FIR) என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியது. இந்த திரைப்படத்தை சுஜாதா என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Faizal Ibrahim Raiz Crew made Ganesh Pooja

இப்படம் சென்னையைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞனைப் பற்றிய கதையாகும். அவனைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதோடு, விவரிக்க முடியாக சில சூழ்நிலைகளில் சிக்கிய ஒரு இளைஞனின் மனிதாபிமானத்தைப் பற்றி சொல்லும் கதையாகும்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் பியர் பிரேமா காதல் படத்தில் நடித்த நடிகை ரைசா வில்சன் மற்றும் சென்னை 600028 படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு "ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் (FIR) திரைப்படத்திற்கு பூஜை போட்டனர். அதனுடைய புகைப்படம் இணைய தளத்தில் வெளியாகியது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக ஆர்வமாகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X