அட பாவிகளா.. ஐபிஎல் மாதிரியே பிக்பாஸ்லேயும் ஃபேக் ஆடியன்ஸ் சவுண்டு போட்டுட்டாய்ங்கய்யா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரமோ வெளியாகியுள்ள நிலையில் அதில் ஐபிஎல் போட்டிகளை போன்றே ஃபேக் ஆடியன்ஸ் சவுண்டு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று மாலை தொடங்குகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அதன் போட்டியாளர்கள் குறித்தும் அரைகுறையாகவும் அரசல் புரசலாகவும் பல தகவல்கள் வெளியான நிலையில் இன்று மாலை தொடங்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

பிரமாண்ட மேடை
இந்நிலையில் இன்று மாலை ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த கமலின் ஃபிரஷ் புரமோ இன்று வெளியாகியுள்ளது. பிரமாண்ட மேடையில் கலை நிகழ்ச்சிகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றே காட்சியாக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான புரமோ இன்று வெளியானது.

ஃபேக் ஆடியன்ஸ்
அந்த புரமோவில் பார்வையாளர்களின் கரகோஷமும் விசில் சத்தமும் பறக்கிறது. ஐபிஎல் போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஃபேக் ஆடியன்ஸ் சவுண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆடியன்ஸ் சவுண்ட்
அதே பாணியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபேக் ஆடியன்ஸ் சவுண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் புரமோவிலும் ஃபேக் ஆடியன்ஸ் மற்றும் சத்தங்களை சேர்த்துள்ளார்களா என குழப்பத்துடன் கேட்டு வருகின்றனர்.

கலாய் மீம்
புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர் இதுலயும் IPL ல போடுற கை தற்றது விசில் அடிக்கிற சவுண்ட்லாம் ஆட் பண்ணுவாங்களா? என பிதாமகன் படத்தில் நடிகை லைலா, சூர்யாவிடம் நாளைக்கு காலேஜ்க்கு வர்றீயா? அங்கேயும் விளையாடலாம் என்று கேட்கும இமேஜை ஷேர் செய்து டவுட் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











