வீட்டில் கள்ளநோட்டு அடித்த டிவி சீரியல் நடிகை, தாய், தங்கை கைது: ரூ. 57 லட்சம் பறிமுதல்
Recommended Video

திருவனந்தபுரம்: கொல்லத்தில் வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்த மலையாள டிவி சீரியல் நடிகை, அவரது தாய், சகோதரி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சூர்யா சசிகுமார்(36). கொல்லத்தில் தனது தாய் ரமா தேவி(56), தங்கை ஸ்ருதி(29) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
சூர்யா தனது வீட்டின் மாடிப் பகுதியில் கள்ள நோட்டு அடித்து வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தகவல்
ஆனக்கரா பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கிருஷ்ணகுமார், லியோ சாம், ரவீந்திரன் உள்ளிட்டோரை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் சூர்யாவின் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

பறிமுதல்
சூர்யாவின் வீட்டில் இருந்த ரூ. 57 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ள நோட்டுகள் அடிக்க அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தாய்
கள்ள நோட்டுகள் அடித்த குற்றத்திற்காக சூர்யா, ரமா தேவி, ஸ்ருதி ஆகியோரை போலீசார் கடந்த 3ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரமா
கள்ள நோட்டு அடித்ததில் முக்கிய மூளையாக ரமா தேவி செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கள்ள நோட்டுகளை அச்சடிக்க தேவையான எந்திரங்களை வாங்க ரமா ரூ. 4.36 லட்சம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

போலீஸ்
அச்சடித்தும் அடிக்காமலும் இருந்த நோட்டுகள், நோட்டுகளை அடிக்கத் தேவையான பொருட்கள் என்று பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு ரூ. 7 கோடி என்று போலீஸ் அதிகாரி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











