உன் மகள் நடிகையாகனும்னா?..நடிகையின் தாயிடம் போலி இயக்குநர் பேசிய ஆபாச ஆடியோ!

சென்னை : சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல இளம் பெண்களை சீரழித்த வேலுசத்ரியன் என்ற போலி இயக்குநர் தாயிடம் பேசிய ஆபாச ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகியோர் பல பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி சீரழிப்பதாகவும் புகார் கொடுத்தார்.

போலி இயக்குநர்

போலி இயக்குநர்

சேலத்தில் உள்ள சினிமா கம்பெனிக்கு வாய்ப்பு கேட்டு சென்றேன் அங்கு இருந்த வேல்சத்ரியன், ஜெயஜோதிஆகியோர் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணிடம் அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் என்றும் கேட்டனர்.

ஆபாச படம்

ஆபாச படம்

ஆனால், என்னிடம் பணம் இல்லாததால் அலுவலகத்தில் சம்பளம் கொடுக்காமல் வேலை செய்து வந்தேன். இதையடுத்து, சில நாட்கள் கழித்து என்னை ஆபாச படத்தில் நடிக்குமாறு வற்புறுத்தினர். இதனால், வேலையே விட்டு நின்றுவிட்டேன். ஆனால் அவர்கள் என் பெண்ணின் போனை பிடிக்கி வைத்துக்கொண்டனர். அதை வாங்க நான் மீண்டும் அந்த அலுவலகத்திற்கு சென்ற போது, அந்த அலுவலகத்தில் சில இளம்பெண்களை வைத்து அவர்கள் ஆபாசமாக படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.

இருவர் கைது

இருவர் கைது

இதையடுத்து, சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலிஸார் சினிமா அலுவலகம் சென்று அங்கிருந்த வேல்சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை பிடித்து விசாரித்து இருவரையும் ஐந்து பிரிவுகளில் வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி ஆடியோ

அதிர்ச்சி ஆடியோ

இதனிடையே இளம் பெண் ஒருவரின் தாயாருடன் வேல்சத்ரியன் பேசும் ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், சினிமா என்றால் தப்போ.. ரைட்டோ.. எல்லாமே நடக்கத்தான் செய்யும், நான் உங்கள் மகளை நடிகையாக்குவேன். சினிமாவில் சரி தவறு அனைத்தும் நடக்கத்தான் செய்யும். நான் அவரை டச் பண்ணுவேன் , கிஸ் பண்ணுவேன், இதில் பிரச்சினை மட்டும் வரக்கூடாது. உங்கள் மகளை எனக்கு பிடிக்கும்,ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

சரிங்க சார்

சரிங்க சார்

இதற்கு அந்த இளம் பெண்ணின் தாயார், சரிங்க சார் என சம்மதிப்பதோடு, நான் மொத்தத்துல உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன்.. எல்லாத்துக்கும் ரெடி பண்ணி , அவள பெரிய இடத்துல கொண்டு வந்துருங்க .. எனக்கு அதுதான் முக்கியம் . ஏன்னா நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்துள்ளேன் சார்.. உங்க இரண்டு பேரோட இருக்கட்டும் சார்.. நீங்க ரெடி பண்ணுங்க என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X