ரஜினியின் 'எந்திரன் 2'... இணையத்தைக் கலக்கும் ரசிகர் டிசைன்!

By Shankar

கடந்த இரு தினங்களாக இணையத்தில் பரபரவென வலம் வந்து கொண்டிருக்கிறது ரஜினி -ஷங்கர் - ரஹ்மான் இணையும் எந்திரன் 2 போஸ்டர் டிசைன்.

ஆனால் இது அதிகாரப்பூர்வ போஸ்டர் அல்ல. ரஜினி ரசிகர் ஒருவர் உருவாக்கி உலவ விட்டது. இது நிஜமல்ல என்று தெரிந்தும் அதை ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருவதால் இன்று செய்தியாகும் அளவுக்குப் போய்விட்டது.

மூணு வருஷமாச்சு...

மூணு வருஷமாச்சு...

ரஜினியின் படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்திரனுக்குப் பிறகு ரஜினி ஆரம்பித்த ராணா படம், அவரது உடல்நிலை காரணமாக நின்று போனது. அதன் பிறகு அறிவிக்கப்பட்ட கோச்சடையான் படம் கடந்த இரு ஆண்டுகளாக தயாராகி வருகிறது. எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

அமைதியா இருங்க..

அமைதியா இருங்க..

ரசிகர்கள் கோச்சடையான் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அவ்வப்போது இந்தப் படம் குறித்து தகவல் கூறி வரும் படத்தின் இயக்குநர் சவுந்தர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் 'அமைதியாகக் காத்திருங்கள் கோச்சடையானுக்காக' என்ற வாசகத்தையே ப்ரொபைல் படமாக வைத்துள்ளார்.

எந்திரன் 2

எந்திரன் 2

இந்த நிலையில்தான் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் எந்திரன் 2 - 2016 ரிலீஸ் என்ற அறிவிப்போடு சில தினங்களுக்கு முன் ஒரு டிசைன் வெளியானது. அதில் ரஜினியின் சிட்டி பாத்திரம் மீண்டும் வருவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்கள் உருவாக்கியது

ரசிகர்கள் உருவாக்கியது

ஒரு கணம் இந்தப் போஸ்டர்களைப் பார்த்து பரபரப்பானவர்கள், பின்னர் அது ரசிகர்களே உருவாக்கியது என்பதைத் தெரிந்து கொண்டனர். ஆனாலும் அந்த போஸ்டரின் வசீகரம் காரணமாக, தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வட இந்திய மீடியா

வட இந்திய மீடியா

ரஜினி பற்றி எந்த செய்தியாக இருந்தாலும் முக்கியத்துவம் தந்து வெளியிடும் வட இந்திய மீடியாக்களில் இந்த எந்திரன் 2 டிசைன் பற்றிய கட்டுரையே எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினி என்ற நடிகர் எத்தனை ஆண்டுகள் கழித்து நடித்தாலும், அவருக்கான வரவேற்பு எப்படி உள்ளது, ரசிகர்கள் அவரை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்த எந்திரன் 2 டிசைனே சான்று. உண்மையல்லாத ஒரு விஷயத்தில் கூட, ரஜினி சம்பந்தப்பட்டதாக இருந்தால் தனி முக்கியத்துவம் வந்துவிடுவதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X