தளபதி விஜய் மகள் பெயரில் உலாவும் ஃபேக் ஐடி.. விஷமிகளால் பரவும் வதந்திகள்.. கடுப்பில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷாவின் பெயரில் ஃபேக் ஐடி ஒன்று வலம் வருகிறது.

மேலும், சீக்கிரமே தமிழ் சினிமாவில் அவர் நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்ற வதந்தியும் விஷமிகளால் பரவப்பட்டு வருகிறது.

இதனால், தளபதி விஜய்யின் குடும்பமும் அவரது ரசிகர்களும் ரொம்பவே அப்செட்டாகி உள்ளனர்.

21வது திருமண நாள்

21வது திருமண நாள்

தளபதி விஜய் மற்றும் சங்கீதாவின் 21வது திருமண நாள் நேற்று முன் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆராக விஜய்யையும், ஜெயலலிதாவாக சங்கீதாவையும் சித்தரித்து ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பல சர்ச்சைகளையும் கிளப்பின.

இளைய தளபதி

இளைய தளபதி

இளைய தளபதியாக இருந்து தளபதியாக நடிகர் விஜய் வளர்ந்துள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சயை இளைய தளபதியாக தற்போது கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். நேற்று ஜேசன் சஞ்சயின் 20வது பிறந்தநாளும் ட்விட்டரில் களை கட்டியது. சமீபத்தில் தான் கனடாவில் இருந்து ஜேசன் சஞ்சய் சென்னைக்கு திரும்பினார்.

ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து

ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து

திவ்யா சாஷா விஜய் எனும் ட்விட்டர் ஐடியில் இருந்து நேற்று, ஜேசன் சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்து ட்வீட் ஒன்று போடப்பட்டிருந்தது. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரில் இணைந்த அந்த ஐடியை 27 ஆயிரம் பேர் ஃபாலோ பண்ணி வருகின்றனர். நீங்க உண்மையாவே விஜய் அண்ணா பொண்ணு தானா என ரசிகர்கள் கேட்க, ஆமாம் என்றும் அவரிடம் இருந்து பதில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேக் ஐடி

ஃபேக் ஐடி

ஆனால், விஜய்யின் மகள் பெயரில் உலாவும் அந்த ஐடி ஃபேக் என நடிகர் சாந்தனு மற்றும் விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ஆகிய இருவரும் தெளிவு படுத்தி உள்ளனர். மேலும், விஜய் ரசிகர்கள் யாரும் அந்த ஃபேக் ஐடியை பின் தொடர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படத்தில் நடிக்கப் போறாராம்

படத்தில் நடிக்கப் போறாராம்

மேலும், மற்றொரு வதந்தியும் விஷமிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. அது என்னவென்றால், நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா சீக்கிரமே படத்தில் நடிக்கப் போகிறார் என்பது தான். திவ்யா சாஷாவுக்கு இப்போ 14 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்திகளை பரப்பும் விஷமிகள்

வதந்திகளை பரப்பும் விஷமிகள்

தளபதி விஜய்க்கு ஏகப்பட்ட இடங்களில் இருந்த் எதிரிகள் உள்ளனர். ஆனால், இதுவரை அவரை நேரடியாக தான் எதிர்த்து வருகின்றனர். ஆனால், தற்போது உருவாகி உள்ள சில எதிரிகள், அவரது குடும்பத்தை திட்டமிட்டு டேமேஜ் செய்ய வேண்டும் என தேவையில்லாத வதந்திகளையும் ஃபேக் ஐடிக்களையும் உருவாக்கி வருவதாக விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Recommended Video

எங்க அப்பா வாசிக்க SIMBU ஆட | VJ LOKESH CHAT | FILMIBEAT TAMIL
தெறி கிளைமேக்ஸில்

தெறி கிளைமேக்ஸில்

திவ்யா சாஷா நடிக்கப் போகிறார் என சில ஆங்கில ஊடகங்களிலும் தகவல் பரவி வருகிறது. ஆனால், அது முற்றிலும் உண்மை கிடையாது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இயக்குநர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் திவ்யா சாஷா முதன் முதலாக அப்பா விஜய்யுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X