உஷாரா இருங்க.. இது நான் இல்லை... மஞ்சுவாரியரின் ரசிகர்கள் ஷாக் !

சென்னை : நடிகை மஞ்சு வாரியர் தனது பெயரில் போலி கணக்கு ஒன்று உலவி வருவதாக கூறியுள்ளார்.

Recommended Video

கொரோனா விழிப்புணர்வு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டார் நடிகை மஞ்சு வாரியர்! - வீடியோ

இது என்னுடைய கணக்கு அல்ல, இதை யாரும் பின் தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மஞ்சு வாரியரின் இந்த பதிவு அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மலையாள லேடி சூப்பர் ஸ்டார்

மலையாள லேடி சூப்பர் ஸ்டார்

மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மஞ்சு வாரியர். இவர் சாட்சியம் என்ற மலையயாளத் திரைப்படத்தில் முதன் முறையாக நடித்தார் இந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதையடுத்து, சல்லாபம், ஈ புழையும் கடந்நு, தூவல் கொட்டாரம், களியாட்டம் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்தார்.

தேசிய விருது

தேசிய விருது

கண்ணேழுதி பொட்டும் தொட்டு என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். கேரள அரசின் விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான திலீப்பை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையிலிருந்த விலகி இருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

கலக்கி வருகிறார்

கலக்கி வருகிறார்

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி மஞ்சி வாரியர் How old are you? என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் தமிழில் 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகாவின் நடிப்பில் வெளியானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த மலையாள திரையுலகில் ரீ எண்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

மனங்களை வென்றார்

மனங்களை வென்றார்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இப்படத்தில் தனுஷின் மனைவியாக நடித்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மஞ்சுவாரியர். அபாரமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்றார்.

கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

மலையாளத்தில் பிசியாக நடித்து வரும் மஞ்சுவாரியர் மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், மம்முட்டியுன் தி பிரீஸ்டு, நிவின் பாலியுடன் படவெட்டி என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

யாரும் பின்தொடர வேண்டாம்

யாரும் பின்தொடர வேண்டாம்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சு வாரியர், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இது ஒரு போலி கணக்கு என்று குறிப்பிட்டுள்ளார். இது என்னுடைய கணக்கு அல்ல, இதை யாரும் பின் தொடர வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளார். மஞ்சு வாரியரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read more about: manju warrier
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X