»   »  விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'அந்த' போட்டோ

விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'அந்த' போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தபோது அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக போலி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த புகைப்படம் உலா வருவது இது இரண்டாவது முறை ஆகும்.

நடிகர் சிம்புவை பிரிந்த பிறகு நயன்தாரா நடிகரும், இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவாவுக்காக அவர் மதம் மாறினார். மேலும் அவரின் பெயரை கையில் பச்சை குத்தினார்.

பிரபுதேவாவுக்காக அவர் சினிமாவில் இருந்து கூட ஒதுங்கினார். இருப்பினும் அந்த காதல் முறிந்துவிட்டது.

போலி புகைப்படம்

போலி புகைப்படம்

நயன்தாராவும், பிரபுதேவாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு போலி புகைப்படம் ஒன்று முன்பு வெளியானது. தற்போது அதே புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

பிரபுதேவா

பிரபுதேவா

விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா அண்மையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து பிரபுதேவாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.

விக்கி

விக்கி

நயனும், பிரபுதேவாவும் ஒன்றாக இருந்த காலத்தில் சேர்ந்து வாங்கிய சொத்து குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பால் விக்னேஷ் சிவன் கோபத்தில் இருக்கிறாராம்.

திருமணம்

திருமணம்

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கி கோபமாக உள்ள நேரத்தில் பழைய புகைப்படம் மீண்டும் ரவுண்ட்ஸ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A fake photo of Nayanthara and Prabhudeva is doing rounds again on social media at a time the former lovers met and discussed some issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil