twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இதுதான் நம்பர், லைன்ல வாங்க' பிரபல ஹீரோ பெயரில் இளம் பெண்களிடம் மோசடி..பரபர விசாரணையில் போலீசார்!

    By
    |

    ஐதராபாத்: பிரபல ஹீரோ பெயரில் சமூக வலைத்தளத்தில் போலியாகக் கணக்குத் தொடங்கி இளம் பெண்களை ஏமாற்றும் இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Recommended Video

    Vijay Devarkonda Slips Down | Fighter Shooting Spot | Ananya Pandey Hug | Charmme | Poori Jaganath

    நடிகர், நடிகைகள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே தனி கிரேஸ்தான். அவர்களுடன் பேசவேண்டும், செல்ஃபி எடுக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு.

    பெண் ரசிகைகளும் இதே ஆசையில் உள்ளனர். அவர்களது சமூக வலைத்தளக் கணக்குகளையும் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    பிரபல தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா. 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலம் அடைந்தவர். இவர் நடித்துள்ள படங்கள் தமிழிலும் வெளியாகி உள்ளன. அவர் நடித்து சமீபத்தில் வெளியான, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படம் தமிழிலும் ரிலீஸ் ஆனது.
    இதில் நான்கு கெட்டப்பில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார்.

    ஏராளமான ரசிகைகள்

    ஏராளமான ரசிகைகள்

    அவர் ஜோடியாக ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இஷபெல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆன இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழ், தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரசிகைகளும் அதிகமாக உள்ளனர்.

    போலி கணக்கு

    போலி கணக்கு

    இந்நிலையில், அவர் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலியாகக் கணக்குத் தொடங்கி ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். ரசிகைகள் பேசினால், அவர்களுக்கு, இதுதான் என் செல்நம்பர் என்று ஒரு எண்ணைக் கொடுத்து, வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பச் சொல்வார். அது விஜய் தேவரகொண்டாதான் என நினைத்து பல இளம் பெண்கள் அவருடன் பேசியுள்ளனர். இதன்மூலம் அவர் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    யார் அந்த டூப்ளிகேட்

    யார் அந்த டூப்ளிகேட்

    என்ன மாதிரியான மோசடி என்பது தெரியவில்லை. இதுபற்றி விஜய் தேவரகொண்டாவுக்கு தகவல் தெரிய வந்தது. இதை அடுத்து, தனது உதவியாளர் கோவிந்த் உதவியுடன், யார் அந்த டூப்ளிகேட் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கினார். ரசிகை என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, அவரிடம் சாட் செய்தனர்.

    சைபர் கிரைம் போலீஸ்

    சைபர் கிரைம் போலீஸ்

    அப்போது, தான் நடிகர் விஜய் தேவரகொண்டாதான் என்று மிதப்பிலேயே நிஜ விஜய் தேவரகொண்டாவுடனும் பேசியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்துள்ள அவர்கள், அந்த போலி விஜய் தேவரகொண்டாவைத் தேடி வருகின்றனர். இந்த செய்தி டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    A fake Vijay Deverakonda,has been trapping many girls by using Actor Vijay Deverakonda's identity. Cybercrime police have registered an FIR on the cheating case
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X