'அதன் காரணமாகத்தான் என் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது..' நடிகை ராஷ்மிகா வருத்தம்!
சென்னை: தனது வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது ஏன் என்பது பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா இப்போது தெரிவித்துள்ளார்.
தமிழில், கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர், ராஷ்மிகா மந்தனா.
இந்தப் படம், ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா.

சரிலேரு நீக்கெவ்வரு
சலோ படம் மூலம் தெலுங்குக்கு சென்றார். அடுத்து, விஜய் தேவரகொண்டாவுடன் கீதகோவிந்தம் டியர் காம்ரேட் படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் கவனிக்கப்பட்டதை அடுத்து முன்னணி ஹீரோ படங்களில் வாய்ப்பு கிடைத்தது. மகேஷ்பாபு ஜோடியாக நடித்த சரிலேரு நீக்கெவ்வரு, சூப்பர் ஹிட்டானது.

நேஷனல் க்ரஷ்
இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்க இருக்கிறார். இதை சுகுமார் இயக்குகிறார். அடுத்து சர்வானந்த் நடிக்கும் ஆடலூ மீக்கு ஜோகார்லு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே, 2020 ஆம் வருடத்தின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார்.

இந்தி படங்கள்
அவர் இப்போது இரண்டு இந்தி படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒன்று, மிஷன் மஞ்சு. இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார். மற்றொன்று அமிதாப் பச்சன் நடிக்கும் டெட்லி. இதை விகாஷ் பால் இயக்குகிறார். இதற்கிடையே, தமிழிலும் ஒரு படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

வருமான வரி சோதனை
இந்நிலையில், அவர் நடித்து இந்த வருடம் ரிலீஸ் ஆகும் படம், பொகுரு. கன்னடப் படமான இது தமிழிலும் வெளியாகிறது. துருவா சார்ஜா ஹீரோ. இதில் ஆசிரியையாக நடித்திருக்கிறார் ராஷ்மிகா. வரும் 19 ஆம் தேதி படம் வெளியாகிறது. இதில், கீதா என்ற ஆசிரியையாக ராஷ்மிகா நடித்திருக்கிறார். இந்தப் படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்மிகா, தன் வீட்டின் நடந்த வருமான வரி சோதனை பற்றி தெரிவித்துள்ளார்.

எப்படி தர முடியும்?
'எனக்கு ரூ.2 கோடி சம்பளம் கிடைப்பதாக அப்போது வெளியான செய்திகள்தான் வருமான வரித்துறை சோதனைக்கு காரணம். ஆனால், நான் அவ்வளவு வாங்கவில்லை. நான் கேட்டாலும் தயாரிப்பாளர்கள் தருவதில்லை. ஹீரோவுக்கே அவ்வளவு தருவதில்லை, உங்களுக்கு எப்படி தர முடியும்? என்கிறார்கள்' என்றார்.

வசதியாக இருக்கிறது
தன்னை பற்றி வரும் சர்ச்சைகள் குறித்து பேசும்போது, ஆரம்பத்தில் அதற்காக அதிகம் வருத்தப்படுவேன். இப்போது அது பெரிய பாதிப்பை ஏற்படுத்து வதில்லை. ஐதராபாத்தில் நான் வாங்கிய வீடு பற்றி கேட்கிறார்கள். ஓட்டலில் தங்குவதை விட, வீடு வசதியாக இருக்கிறது என்று நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











