டைவர்ஸ் ஆகணும்னு நினைக்குறாங்க.. கஷ்டமா இருக்கு ஷாரிக் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: நடிகர் ரியாஸ் கானின் மகனான ஷாரிக் ஹாசன் தன்னைவிட வயதில் மூத்த பெண் மரியா ஜெனிஃபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்த பல யூடியூப் சேனலுக்கு வலைந்து பேட்டி கொடுத்து வருகின்றனர். அதில் பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக மிரட்டிக்கொண்டு இருக்கும் ரியாஸ் கான், நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், ஷாரிக் ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானார். இதைத்தொடர்ந்து, டான், ஜகிரி தோஸ்து உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

shariq hassan maria interview

காதல் திருமணம்: ஷாரிக் ஹாசன் மரியாவை காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததை அடுத்து, இவர்களின் திருமண ஆகஸ்ட் 8-ஆம் தேதி, அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அண்மையில் யூடியூப் சேனலுகு பேட்டி அளித்து வரும் இவர்கள், தங்களின் காதல் கதையை கூறிவருகின்றனர். அதில் ஷாரிக், ஜிம்மில் தான் நான் முதன் முதலில் மரியாவை பார்த்தேன். பார்த்தவுடன் அவரை எனக்கு பிடித்துவிட்டதால், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டடேன்.

ஐ லவ் யூ கூட சொல்லல: ஆனால், மரியாவிற்கு இந்த கிரிஞ்ச் லவ் எல்லாம் பிடிக்காது, இதனால், அவளாக காதலை சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போது ஒருநாள் எதிர்பாராத ஒருநாளில் என்கூடவே இருந்துவிடு என்று தான் சொன்னாள், ஐ லவ் யூ கூட சொல்லவில்லை. அன்றிலிருந்து காலை முதல் நைட் வரை மரியா கூடவே இருப்பேன். இப்படியே எட்டு மாதம் ஆகிவிட்டது. வீட்டில் எங்கள் விஷயம் தெரிந்து கொஞ்சம் யோசித்தார்கள். அதன் பின் ஜாராவை பார்த்ததும் அவர்களின் மனம் மாறிவிட்டது.

கஷ்டமா இருக்கு: அப்போது தான், நாங்கள் இருவரும் சேர்ந்து திருமண தேதியை முடிவு செய்துவிட்டுத்தான் அம்மாவிடம் சொன்னோம் அவர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள். திருமணத்திற்கு முன்னாடி இருந்து இப்போது வரை இருவரும் சேர்ந்துதான் குடும்பத்தை சமாளித்து வருகிறோம். ஆனால், எங்கள் இருவரையும் பார்த்து சிலர், இன்னும் எத்தனை நாளுனு பார்க்கலாம், டைவர்ஸ் ஆகணும்னு நினைக்குறாங்க அதைப் பார்த்து மரியா கவலைப்பட்டாள், நான் தான் அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாதே என்று சொன்னேன் என அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X