ஒரே செல்லில் ஓவர் பேச்சாமே.. சிறையில் இருக்கும் நடிகை ராகிணிக்கு மேக்கப்.. சஞ்சனாவுக்கு சாக்லேட்!

By

பெங்களூரு: சிறையில் இருக்கும் நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் ஓவராக பேசுவதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கன்னட சினிமா துறையில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது

போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திரஜித் லங்கேஷ்

இந்திரஜித் லங்கேஷ்

கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகப் புகார் கூறியிருந்தார். இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகிணி திவேதி

ராகிணி திவேதி

இதையடுத்து போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்ட்ரிதா ராய்

ஆண்ட்ரிதா ராய்

இதில் மற்றொரு கன்னட நடிகையான ஆண்ட்ரிதா ராய், அவர் கணவரும் நடிகருமான திகாந்த் ஆகியோரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவர்களிடம் நான்கு மணி நேரம் போலீசார் விசாரித்தனர். அவர்கள், தாங்கள் பார்ட்டிகளுக்கு சென்றது உண்மை என்றும் ஆனால் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்றும் கூறினர்.

பார்ப்பன அக்ரஹாரா

பார்ப்பன அக்ரஹாரா

இதையடுத்து அவர்களை அனுப்பிவிட்டனர். இந்நிலையில் நடிகை ராகிணி திவேதியும் சஞ்சனா கல்ராணியும் பார்ப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை, பெற்றோர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது தாங்கள் கொண்டு வந்த பொருட்களை அவர்களிடம் கொடுத்தனர்.

மேக்கப் சாதனங்கள்

மேக்கப் சாதனங்கள்

கொரோனா காரணமாக, அந்த பொருட்களை போலீசார் வாங்கி வைத்துள்ளனர். அதில் நடிகை சஞ்சனா கல்ராணியின் அம்மா, சில உடைகள் மற்றும் சாக்லேட்டுகளை மகளுக்கு கொண்டு வந்துள்ளார். நடிகை ராகிணி திவேதியின் அம்மாவும் சகோதரரும் ஆடைகள் மற்றும் மேக்கப் சாதனங்களை கொடுத்துள்ளனர்.

இருவரும் ஓவர் பேச்சு

இருவரும் ஓவர் பேச்சு

ஒரே செல்லில் அடைக்கப்பட்டுள்ள இருவரும் ஓவராக பேசுவதாக போலீசார் கூறியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் ஜாமின் கிடைத்துவிடும் என்றும் விரைவில் வீடு திரும்புவார்கள் என்றும் அவர்கள் குடும்பத்தினர் நம்புகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்து நடிகை சஞ்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X