ஷகீலா எதிர்பார்த்தது நடந்துருச்சு..மாறும் கண்ணோட்டம்.. எல்லாப் 'புகழும்' குக் வித் கோமாளிக்குதான்!

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஷகீலா மீதான கண்ணோட்டமே மக்களுக்கு மாறிவிட்டது.

மலையாள தேசத்தை பூர்வீகமாக கொண்டவர் ஷகீலா. 90களில் சினிமாவுக்கு அறிமுகமான அவருக்கு ஆபாசபட உலகம்தான் கை கொடுத்தது.

பல ஆபாச படங்களில் நடித்துள்ளார் ஷகீலா. ஷகீலாவின் ஆபாச படங்களை பார்ப்பதற்கு என்று தனிக்கூட்டமே உள்ளது.

கேலிக்குள்ளான பெயர்

கேலிக்குள்ளான பெயர்

ஷகீலா படம் ரிலீஸ் என்றால் டாப் மல்லுவுட் நடிகர்களே தங்களின் படத்தை ரிலீஸ் செய்ய யோசித்த காலமெல்லாம் உண்டு. ஷகீலா காட்டிய கவர்ச்சியால் அந்த பெயரே கேலிக்குள்ளனாது.

ஆபாச கருவியாக

ஆபாச கருவியாக

ஷகீலா தானாக விரும்பி இந்த ஆபாச பட துறைக்குள் வரவில்லை. அவரது சூழ்நிலையும் காலத்தின் கட்டாயமுமே அவரை இந்தத் துறைக்குள் தள்ளியது. தமிழ் படங்களிலும் அவரை ஒரு ஆபாச கருவியாகதான் பயன்படுத்தப்பட்டார்.

பிரஸ்மீட்டுகளில் உருக்கம்

பிரஸ்மீட்டுகளில் உருக்கம்

தன்னை மக்கள் பார்க்கும் பார்வை மாற வேண்டும் என பல பிரஸ்மீட்டுகளில் உருக்கமாக பேசியிருக்கிறார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் ஷகீலா.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

இதில் விதவிதமாக சமைத்து அசத்தும் ஷகீலா, சக போட்டியாளர்களுடனுடம் ஒரு அன்பான உறவை கொண்டுள்ளார். சக போட்டியாளர்கள் அனைவரும் ஷகீலாவை மம்மி மம்மி என்று அழைத்து வருவது அவரையே நெகிழ வைத்துள்ளது.

குடும்பமாக பார்க்கும் ரசிகர்கள்

குடும்பமாக பார்க்கும் ரசிகர்கள்

அதிலும் ஷகீலாவுக்கும் அவருடைய ஜோடி போட்டியாளரான புகழுக்கும் இடையிலான உறவு.. ஆகா போட வைக்கிறது. ஷகீலா பங்கேற்றுள்ள ஒரு நிகழ்ச்சியை முதல் முறையாக குடும்பம் குடும்பமாக அமர்ந்து பார்க்கிறார்கள்.

ஒரிஜினல் கேரக்டர்

ஒரிஜினல் கேரக்டர்

கவர்ச்சியையும் தாண்டி ஷகீலாவின் திறமையையும் அவருடைய ஒரிஜினல் கேரக்டரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளிப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களும் ஆண்களும் மட்டுமே ரசிகர்களாக இருந்த நிலை மாறி பெண்களும் அவரை ரசிக்க தொடங்கி விட்டனர்.

Recommended Video

Shakeela Biopic என் வாழ்க்கையில நிறைய தப்பு பண்ணியிருக்கேன் | Filmibeat tamil
எல்லா புகழும்..

எல்லா புகழும்..

ஷகிலா மீதான மக்களின் பார்வை மாறியிருப்பது மக்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பிலேயே தெரிந்திருக்கும். ஷகிலா எதிர்பார்த்தது போலவே அவர் மீதான கண்ணோட்டம் மாறி அவரை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டிருப்பதற்கான எல்லா புகழும் குக் வித் கோமாளியையே சேரும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X