இது தான்.. இந்த விசயத்துல தான் ‘பேட்ட’ய விஸ்வாசம் தூக்கிச் சாப்டுடுச்சு!

விஸ்வாசம் படத்திற்கு பி மற்றும் சி சென்டர்களில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

Recommended Video

தமிழகத்தில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலை- வீடியோ

சென்னை: ரஜினியின் பேட்ட படத்தைவிட அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு பி மற்றும் சி சென்டர்களில் வசூல் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பொங்கலையொட்டி ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் நேற்று முன்தினம் ரிலீசானது. இரண்டு படங்களுமே மாஸ் ஹீரோக்களின் படம் என்பதால் எது பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பிடிக்கும் என்ற ஆர்வம் மக்களிடையே இருந்தது.

இரண்டு படங்களுக்குமே விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், ஒரு சில காரணங்களால் பேட்ட படத்தைவிட விஸ்வாசம் வசூல் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

வெற்றிக்குக் காரணம்:

வெற்றிக்குக் காரணம்:

விஸ்வாசம் படத்திற்கு பி மற்றும் சி சென்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம். குடும்பக் கதையில் தேவையான அளவு சென்டிமெண்ட், காதல், ரொமான்ஸ், காமெடி, ஆக்சன் என எல்லாவற்றையும் கலந்து இயக்குநர் சிவா கொடுத்திருப்பதே இந்த வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மதுரை ஸ்லாங்:

மதுரை ஸ்லாங்:

அதோடு, தனது முந்தையப் படங்களில் இருந்து வேறுபட்டு அஜித் இந்தப் படத்தில் தூக்குதுரை கதாபாத்திரத்தில் மதுரை ஸ்லாங்கில் பேசி அசத்தி இருக்கிறார். அவர் தனது மகளுக்காக உருகும் காட்சிகள், தியேட்டர்களில் தந்தைகளை கண்கலங்க வைத்து விடுகிறது. இதனால் குடும்பத்துடன் இப்படத்தைப் பார்க்க மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.

நயனும் காரணம்:

நயனும் காரணம்:

படத்தின் வெற்றிக்கு அதன் நாயகி நயனும் முக்கியக் காரணம். தனிநாயகியாக தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வரும் நயன், அஜித்திற்காக இப்படத்தில் மீண்டும் காதல் நாயகியாகி உள்ளார். ஆனாலும், அவரது கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நயன் ரசிகர்கள்:

நயன் ரசிகர்கள்:

ஏற்கனவே தமிழில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் நயனுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனாலேயே அவர் மட்டுமே நடித்த படங்கள்கூட சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன. இந்நிலையில், விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்களோடு, நயனின் ரசிகர்களும் சேரும்போது படத்தின் வசூல் அதிகரிப்பதில் ஆச்சர்யமில்லை.

இசை பெரிய தூண்:

இசை பெரிய தூண்:

இசையும் இப்படத்திற்கு பெரிய தூணாக அமைந்துள்ளது. ஏற்கனவே டிரெண்டிங்கான பாடல்களை தற்போது படத்தில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவையே விஸ்வாசம் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X