விஜய்யால் குடும்பத்திற்குள் சண்டையா? திமுகவின் சத்யராஜ் மகள் நெத்தியில் அடிச்ச மாதிரி சொல்லீட்டாங்களே
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்கிறார். இதற்காக 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜய்க்கு திருத்தணியில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் நிலவுகிறது.
இதில் நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாகவே அவர் கட்சி தொடங்கிய நாளில் இருந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். ஆனால் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் தீவிர ஆதரவாளர் மட்டுமல்லாமல் திமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் துணை செயலாளராகவும் பொறுப்பில் இருக்கிறார். இதனால் நடிகர் விஜயின் அரசியல் நடவடிக்கைகளை அவர் மிகவும் காட்டமாகவே விமர்சித்து வருகிறார்.

அதேபோல் நடிகர் சத்யராஜ் விஜயின் அரசியல் நிலைப்பாடுகளை நடவடிக்கைகளை காட்டமாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக கரூர் வைர சம்பவம் நிகழ்ந்த பிறகு விஜய் மிகவும் கோபத்துடன் விமர்சித்திருந்தார். நிலையில் ஒரே குடும்பத்துக்குள் இருவர் திமுகவிற்கும் ஒருவர் தமிழக வெற்றி கழகத்திற்கும் ஆதரவாக இருக்கும் போது குடும்பத்திற்குள் எந்த சண்டையும் வரவில்லையா என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு மிகவும் அழகான பதிலை கொடுத்துள்ளார் திவ்யா சத்யராஜ்.
குடும்பத்தில் சங்கடம்: இது தொடர்பாக அவர் கூறுகையில் எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்த இரண்டு பேர் என்றால் அது ஒன்று எனது அப்பா சத்தியராஜ் மற்றொன்று எனது சகோதரன் சிபிராஜ். இவர்கள் இருவரையும் தான் எனக்கு மிகவும் பிடிக்கும், சிபிராஜ்க்கு நீல நிறம் பிடிக்கும் எனக்கு பிங்க் நிறம் பிடிக்கும் இந்த காரணத்திற்காக எங்கள் இருவருக்கும் ஒருபோதும் சண்டை வந்ததே கிடையாது.

சண்டை வர வாய்ப்பே இல்லை: அப்படி பார்க்கையில் திமுக, தவெக என்ற சண்டையும் வந்ததில்லை. நாங்கள் மிகவும் முற்போக்கான குடும்பமாக இருக்கிறோம். நேற்று கூட நாங்கள் அனைவரும் இணைந்து பிரியாணி சாப்பிட வெளியே சென்றோம். ஆனால் எங்களுக்குள் இது தொடர்பாக எந்த சண்டையும் வர வாய்ப்பே இல்லை என்று அழகாகவும் நேர்த்தியாகவும் பதில் அளித்தார். அவரது பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இரண்டு தொகுதி: நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இது அவர் தோல்வி அடைந்து விடுவார் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு என்று அரசியல் கட்சியினர் பலரும் விமர்சிக்கிறார்கள். அதே நேரத்தில் விஜய்க்கு ஆதரவாகவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











