'ஃபேமிலி ஃபர்ஸ்ட்... நெக்ஸ்ட் எவ்ரிதிங்!' - அதான் சூப்பர் ஸ்டார்

இன்று தனது பிறந்த நாளையொட்டி நிருபர்களுக்குப் பேட்டியளித்த ரஜினியிடம், ரசிகர்களுக்கு உங்களுடைய செய்தி என்ன என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ரஜினி, "எப்போதும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். அந்த சிந்தனை, பாஸிடிவ் தாட்ஸ் இருந்தால் நினைத்தது நடக்கும், வாழ்க்கையில் முன்னேறலாம். நெகடிவ் சிந்தனை வேண்டாம். நேர்மையா நடந்துக்கணும். அது இன்னும் முக்கியம்.
முக்கியமாக நான் எப்போதும் சொல்ல விரும்புவது, என் பேன்ஸுக்கு எப்பவுமே சொல்வேன்.. அப்பா அம்மாதான் முக்கியம்...
இன்பாக்ட், என் பிறந்த நாளில் என் ரசிகர்கள் அவரவர் தாய் தந்தையரின் பிறந்த நாளாக நினைத்து அவர்களை பூஜை பண்ணா அதுவே எனக்கு மிக மிக சந்தோஷம் தரும் விஷயம்," என்றார்.
Comments


Click it and Unblock the Notifications