ஃபேமிலி கோல்மால்... காமெடியில் உருவாகி வரும் F3 ஸ்பெஷல் அப்டேட்
சென்னை : இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் F2.
கலகலப்பான ஃபேமிலி காமெடி கதை களத்தில் வெளியான இந்த படத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ் ஹீரோவாக நடித்து இருந்தனர்.
கணவன்களுக்கும் மனைவிகளுக்கும் இடையே நடக்கும் ஃபேமிலி கோல்மால் நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாகவும் காமெடியுடனும் கூறியிருந்த இந்த படத்தின் அடுத்த பாகம் F3 ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

அசுரன் தெலுங்கு ரீமேக்கில்
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் வெங்கடேஷ் தமிழில் வெளியாகும் பல படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார். மிக சரளமாக தமிழ் பேசக்கூடிய இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரிலீஸ் ஆகி இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதைத் தொடர்ந்து இப்பொழுது திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் .

கணவன்களுக்கு மனைவிகளுக்கும்
கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கத்தில் வெளியான திரைப்படம் F2. கணவன்களுக்கு மனைவிகளுக்கும் இடையே நடக்கும் ஃபேமிலி கோல்மால் நிகழ்வுகளை ரசிக்கும் வகையில் முழுவதும் காமெடியுடன் கூறியிருந்தது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதில் ஹீரோவாக வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் நடித்திருந்தனர். கதாநாயகிகளாக தமன்னா மற்றும் மெஹரின் நடித்திருந்தனர்.

இரண்டாம் பாகம் F3
தெரிந்தும் மற்றும் தெரியாத செய்யும் தவறுகளுக்காக மனைவியிடம் மாட்டிக் கொள்ளும் கணவர்மார்கள் அதிலிருந்து எவ்வாறு சாதுரியமாக கோல்மால் செய்து தப்பிக்கிறார்கள் என்பதே மிகவும் காமெடியுடன் கூறியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் F2ன் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக F3 தற்போது உருவாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு பின் பல்வேறு கட்டங்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

ரிலீஸ் தேதி வெளியானது
F2ல் நடித்த அதே நடிகர் நடிகைகள் இந்த படத்திலும் நடித்து இருக்க காமெடிக்கு நாங்க கேரண்டி என சொல்லும் வகையில் முழுவதும் காமெடி கதை களத்தில் உருவாகியுள்ள F3 படத்தின் ரிலீஸ் தேதியை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு F3 படக்குழு இப்பொழுது ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி மே 27ஆம் தேதி சம்மர் ட்ரீட்டாக F3 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











