சிக்கலில் சமந்தா.. வெடிக்கும் கண்டனங்கள்.. மெளனம் காக்கும் பிரபலங்கள்.. #FamilyMan2_Against_Tamils

சென்னை: தணிக்கை இல்லாத நிலையில், தொடர்ந்து ஒடிடி படைப்புகள் பலரது மனங்களை புண்படுத்தி வருகின்றன.

இயக்குநர்கள் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் கருத்துத் திணிப்புகளை செய்து வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சமந்தா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் ஈழத் தமிழர்களை கொச்சைப்படுத்தி உள்ளனர் என #FamilyMan2_Against_Tamils என்ற ஹாஷ்டேக்கில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சிக்கலில் சமந்தா

சிக்கலில் சமந்தா

இந்த வெப் தொடரில் ஈழ போராளியாக நடித்துள்ள நடிகை சமந்தா கமர்ஷியலுக்காக ஆபாச காட்சிகளில் நடித்துள்ளார் என்றும் ஈழ போராளி பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கண்டனங்கள் எழுந்துள்ளன.

பாய்காட் அமேசான்

பாய்காட் அமேசான்

இலங்கை தமிழர்களின் தியாக போராட்டத்தை இப்படி எள்ளி நகையாடியுள்ள அமேசான் பிரைமை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும், தமிழர்கள் அமேசானை அன்சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்றும் வலுவான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

எல்லாமே தப்பு

எல்லாமே தப்பு

ஈழத்தில் இருந்து பிரபாகரன் எங்கேயும் தப்பிச் செல்லவில்லை. விடுதலை புலிகள் ஒரு போதும் மது அருந்த மாட்டார்கள், இயக்கத்தை விட்டு ஒருபோதும் பிரபாகரன் வெளியேறியது கிடையாது. ஐஎஸ்ஐஎஸ் உடன் எல்.டி.டி.இ.க்கு ஒரு போதும் தொடர்பு இல்லை. ஆபாச வசனங்களை அவர்கள் பேசவே மாட்டார்கள். ஆனால், இந்த சீரியலில் ஈழத் தமிழர்களை எந்தளவுக்கு தவறாக சித்தரிக்க முடியுமோ அந்தளவுக்கு சித்தரித்துள்ளனர்.

துரோகிகள்

துரோகிகள்

தமிழனத்தின் வரலாற்றை திரித்து கொச்சைப்படுத்தி பொய்யான வரலாற்றை கூறும்.. கும்பலால் எடுக்கப்பட்ட தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்துள்ள தமிழகத்தை சேர்ந்த துரோகிகள் என பாஸ்கரன் கதாபாத்திரத்தில் நடித்த மைம் கோபி, தீபனாக நடித்த அழகம் பெருமாள் மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்த தேவதர்ஷினிக்கு எதிரான கண்டனங்களும் குவிந்துள்ளன.

லாஸ்லியா, தர்ஷன்

லாஸ்லியா, தர்ஷன்

இங்க இருக்கிற தமிழர்களே இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்கிறாங்க.. பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் இலங்கையில் இருந்து வந்த போட்டியாளர்களான லாஸ்லியா மற்றும் தர்ஷன் எல்லாம் ஏன் அமைதியா இருக்கீங்க என இந்த நெட்டிசன் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வெப் தொடருக்கு சில பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளனர். பலர் நமக்கு ஏன் வம்பு என மெளனம் காத்து வருகின்றனர்.

தலைசிறந்த ராணுவம்

தலைசிறந்த ராணுவம்

"ஒடுக்கப்பட்ட, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட தன் இனத்திற்கான உரிமையை மீட்க இந்த உலகமே இதுவரை காணாத ஒழுக்கத்தோடு ஒரு தமிழ் தேசிய அரசாங்கத்தை, ஆறுபடை கொண்ட ராணுவத்தை கட்டமைத்தவர்கள் எங்கள் #LTTE அதன் வரலாற்றை சிதைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது" என தி ஃபேமிலிமேன் 2 வெப் தொடரை இயக்கிய இயக்குநர்களுக்கும் அதில் நடித்த நடிகர்களுக்கும் அதை ஒளிபரப்பும் அமேசான் பிரைமுக்கும் கண்டனங்களை குவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X