“அண்ணாத்த“ லேட்டஸ்ட் அப்டேட்… ரஜினியுடன் இணைந்த பிரபல இயக்குனரின் தம்பி.. !

சென்னை : அண்ணாத்த படத்தில் பிரபல நடிகரும், இயக்குநர் சிவாவின் தம்பியுமான பாலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர், அன்பு, காதல் கிசு கிசு, மஞ்சள் வெயில் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதே போல, மலையாளத்திலும் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அண்ணாத்த

அண்ணாத்த

அண்ணாத்த ரஜினிகாந்தின் 168வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு மீனா, பிரகாஷ்ராஜ், சூரி,சதீஷ் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ரமோஷி ஃபிலிம் சிட்டியில் கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து, கொரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து,கொரோனா முதல் அலை ஓய்ந்து, ஓரளவு நிலைமை சரியானதை அடுத்து பலத்த பாதுகாப்புடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

கொரோனாவால் தாமதம்

கொரோனாவால் தாமதம்

அப்போது ஹைதராபாத் படப்பிடிப்புத்தளத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பை தொடங்க முடியாதபடி கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதால் படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை.

படப்பிடிப்பு பணிகள் முடிந்தன

படப்பிடிப்பு பணிகள் முடிந்தன

அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். இந்த முறை ரஜினிகாந்த் சம்பந்தமான அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

அமெரிக்கா சென்றார்

அமெரிக்கா சென்றார்

அமெரிக்காவில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்ட ரஜினிகாந்த் ஆண்டு தோறும் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து,கடந்த ஜூன் 19ந் தேதி அமெரிக்கா சென்ற ரஜினி அங்கு 3 வார காலம் தங்கி மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அவர். இதையடுத்து, சென்னை திரும்பிய ரஜினி அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார்.

மீனா டப்பிங் பணி

மீனா டப்பிங் பணி

முத்து, வீரா, எஜமான் போன்ற திரைப்படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா, நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் அண்ணாத்த டப்பிங் பணியை முடிந்துள்ளதாக கூறியிருந்தார். அதேபோல நகைச்சுவை நடிகர் சதீஷூம் டப்பிங் பணியை முடித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இயக்குனர் சிவாவின் தம்பி

இயக்குனர் சிவாவின் தம்பி

இயக்குநர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர், அன்பு, காதல் கிசு கிசு, மஞ்சள் வெயில் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ள இவர், அஜித் நடித்திருந்த வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்துடன் நடிப்பது மிகவும் பெருமைக்குரிய தருணம் என்று பால தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லக்னோவில் படப்பிடிப்பு

லக்னோவில் படப்பிடிப்பு

அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4 ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது அண்ணாத்த படக்குழு லக்னோவில் உள்ளது. அங்கு விறுவிறுப்பான இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X