சிவாஜி கணேசன் முத்தம் கொடுத்த அந்த சிறுவன் யார்? இப்போது தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்!

By yogeshwaran moorthi

சென்னை : தமிழ் சினிமாவின் காட்ஃபாதரான சிவாஜி கணேசன் சிறுவனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் முதலிடம் சிவாஜி கணேசனுக்கு தான். நடிப்பின் பல்கலைக்கழகம், நடிகர் திலகம், செவாலியே என்று ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த கதாபாத்திரமாக எளிதாக மாறும் சிவாஜி கணேசன், சம கால நடிகர்களுக்கும் பாடமாக இருந்து வருகிறார்.

Famous Actor Childhood photo with Legendary Actor Sivaji Ganesan is trending on Social Media

மேடை நாடக பாணியிலான சினிமாவாக இருந்தாலும், யதார்த்த சினிமாவாக மாறிய போதும் சிவாஜி என்ற நடிகனுக்கு அருகில் யாராலும் வந்து நிற்க முடியவில்லை என்பதே வரலாறு. திருவிளையாடல் படத்தில் மேடை நாடக பாணியில் நடித்த சிவாஜி கணேசன் தான், தேவர் மகன், படையப்பா, முதல் மரியாதை படங்களில் யதார்த்தமாக நடித்து ஆச்சரியம் கொடுத்தார்.

அதன்பின் சிவாஜி கணேசனின் குடும்பத்தில் இருந்து அடுத்த தலைமுறையான அவரது மகன்கள் மகனான பிரபு, ராம்குமார் உள்ளிட்டோரும் சினிமாவுக்கு வந்தனர். அதேபோல் கும்கி படத்தின் மூலமாக பிரபிவின் மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவுக்குள் வந்துவிட்டார். ஆனாலும் இன்றளவும் சிவாஜி படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் ஒரு புகைப்படம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. சிறுவன் ஒருவருக்கு சிவாஜி வாரி அணைத்து முத்தம் கொடுப்பதால், அந்த சிறுவன் யார் என்று பலரும் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுவன் யார் என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பது சிவாஜியின் இளைய மகன் பிரபு தான்.

கன்னக்குழியை வைத்து பார்க்கும் போது அது பிரபு என்று பலரும் கூறி வந்தனர். இந்த புகைப்படம் சிவாஜி சினிமாவின் உச்சத்தில் இருந்த போது எடுக்கப்பட்டதாகும். அதன்பின் பிரவு சினிமாவில் அறிமுகமாகி நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார். தற்போதும் நடித்து வருகிறார். இது ட்ரெண்டாகி வந்த நிலையில், பலரும் பிரபுவின் சினிமா வாழ்க்கை குறித்து விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X