பிரதீப் ரங்கநாதன் பெண்களை மட்டம் தட்டினார்.. ஒரு நாள் நிச்சயம் வருந்துவார்.. பிரபல நடிகர்!

சென்னை : இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது தவறை உணர்ந்து லவ் டுடே படத்தை எடுத்ததற்காக நிச்சம் வருத்தப்படுவார் என்று பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன், இவானா, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா சரத்குமார், ரவீனா மற்றும் பல யூடியூப் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

2022ம் ஆண்டு அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக லவ் டுடே திரைப்படம் இருக்கிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது. தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான இப்படத்திற்கு திரையரங்கில் அமோக வரவேற்பு இருந்தது.

லவ் டுடே

லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வசூலை வாரிக்குவித்தது. லவ் டுடே படத்தின் தயாரிப்பாளரான ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் அர்ச்சனா கல்பாத்தி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன், தனது இரண்டாவது முயற்சியிலே இமாலய வெற்றி பெற்றதால், மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறார். மேலும் லவ் டுடேயின் மாபெரும் வெற்றியின் காரணமாக தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் கோலிவுட்டில் அடிபட்டு வருகின்றன.

செல்வராகவன் வருத்தப்பட்டார்

செல்வராகவன் வருத்தப்பட்டார்

இந்நிலையில், நடிகர் கார்த்திக் குமார், லவ் டுடே படம் குறித்து அளித்துள்ள பேட்டியில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படத்தை உருவாக்கியதற்காக பிரதீப் வருத்தப்படுவார் என்று கூறியுள்ளார். "அடிடா அவள... ஒதடா அவளா" என்ற பாடலை உருவாக்கியதற்காக செல்வராகவன் வருத்தப்பட்டார். இது மிகவும் பெண் வெறுப்பு மற்றும் அவர் அந்த பாடலை உருவாக்கியிருக்கக்கூடாது என்று நினைத்தார்.

பெண்களை மட்டம் தட்டினார்

பெண்களை மட்டம் தட்டினார்

அதேபோலத்தான் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தில் பெண்களை மட்டம் தட்டி அவர்களை சிரிக்க வைத்துள்ளார். இது ஒரு சமமான கதை இல்லை, இது ஒரு ஆண் முன்னோக்கு கதை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் ஒரு படம் எடுத்துவிட்டோமே என நிச்சயம் வருத்தப்படுவார் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். அலைபாயுதே, கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X