ஜிபி முத்துவிற்கு பதிலாக களத்தில் இறங்கும் அடுத்த போட்டியாளர்.. யாருன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக பட்டையை கிளப்பினார் பிரபல யூடியூபர் ஜிபி முத்து.
ஆனால் தன்னுடைய குழந்தைகளை பார்க்க வேண்டும் என்றும் தான் போட்டியிலிருந்து விலகவுள்ளதாகவும் அவர் தொடர்ந்து கடந்த சில தினங்களாக கூறிவந்தார்.
இதனிடையே நேற்றைய தினம் அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவரது முடிவிற்கு மதிப்பளித்து கமல்ஹாசன் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிபிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராகவும் முதல் போட்டியாளராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் ஜிபி முத்து. பைனல் போட்டியாளராக மாறுவதற்கான அனைத்து திறமைகளும் இவருக்கு இருந்தது. நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார்.

வீட்டிற்கு திரும்ப அடம்
இதனிடையே இரண்டு வாரங்கள் அனைவரையும் கவர்ந்த ஜிபி முத்துவிற்கு தனது குழந்தைகளை பார்க்கும் ஏக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக இவர் தான் வீட்டிற்கு போக வேண்டும் என்றும் உடல்நிலை சரியில்லாத தன்னுடைய மகன் விஷ்ணுவை பார்க்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

வீட்டிற்கு திரும்ப அடம்
இதனிடையே இரண்டு வாரங்கள் அனைவரையும் கவர்ந்த ஜிபி முத்துவிற்கு தனது குழந்தைகளை பார்க்கும் ஏக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக இவர் தான் வீட்டிற்கு போக வேண்டும் என்றும் உடல்நிலை சரியில்லாத தன்னுடைய மகன் விஷ்ணுவை பார்க்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

ஜிபி முத்துவிடம் பேசிய கமல்
இதனிடையே நேற்றைய தினம் இரண்டாவது வாரயிறுதியையொட்டி போட்டியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், இதுகுறித்து ஜிபி முத்துவிடம் பேசினார். தொடர்ந்து போட்டியில் அவருக்கு சிறப்பான ஆதரவு இருந்து வருவதையும் நிகழ்ச்சியில் தொடர்ந்தால் பல பலன்களை அவர் அடைய முடியும் என்பதையும் எடுத்துக் கூறினார்.

முடிவில் உறுதியாக இருந்த ஜிபி முத்து
ஆனாலும் வீட்டிற்கு திரும்பும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்த ஜிபி முத்து, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரும் கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே அவருக்கு பதிலாக, அதே வேகத்துடன் செயல்படும் மற்றொரு போட்டியாளரை தற்போது களமிறக்க வேண்டிய கட்டாயம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜிபி முத்துவிற்கு பதிலாக மன்சூர் அலிகான்?
இதையடுத்து ஜிபி முத்துவிற்கு பதிலாக பிரபல நடிகர் மன்சூர் அலிகான் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய அடாவடி மற்றும் அதிரடி செயல்பாடுகளால் ரசிகர்களை கவர்ந்த மன்சூர் அலிகான், ஜிபி முத்துவிற்கு பதிலாக களமிறக்கப்படவுள்ளது சிறந்த முடிவாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











