Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அஜித்தை ஐதராபாத்துக்கே போய் மீட் பண்ண ஹீரோ... வெளியான சூப்பர் புகைப்படம்... என்ன காரணம்?
ஐதராபாத் : நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் ஏகே61. அஜித், எச் வினோத், போனி கபூர் கூட்டணி 3வது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது. தற்போது ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
ஹிரித்திக்
ரோஷனின்
புதிய
காதலி
இவங்க
தானா?
நண்பன்
பட
பாணியில்
காதலை
சொல்லிட்டாங்களே!

ஏகே61 படம்
நடிகர் அஜித், இயக்குநர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஏகே61. இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்டவை வெளியாகாத நிலையில் படத்தின் சூட்டிங் மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்
கடந்த மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் தயாரிப்பாளர் போனிகபூர் எந்த அப்டேட்டையை கொடுக்கவில்லை. இதனிடையே ஐதராபாத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்ட செட்
படம் பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கென பேங்க் செட் மற்றும் மவுண்ட் ரோடு செட் போன்றவை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே அஜித்திற்கு ஜோடியாக படத்தில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அஜித்தின் கெட்டப்
படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடித்து வருகிறார். அவரது ஒரு கெட்டப் நீண்ட தாடியுடன் கூலர்ஸ் அணிந்தபடி காணப்படுகிறது. இதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் ஆதி சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார்.

அஜித்தை சந்தித்த ஆதி
இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சந்திப்பின் காரணம் குறித்து ஆதி வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அஜித்தை நேரில் சந்தித்து அவர் அழைப்பிதழ் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அப்டேட் கேட்டு ரசிகர்கள் கமெண்ட்
ஆயினும் இந்தப் படத்திலும் அஜித்தின் ஏகே61 படத்திற்கான லுக் வெளிப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் இந்தப் படத்தையும் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். இந்தப் படத்திலும் நீண்ட தாடி, கூலர்ஸ் சகிதம் அஜித்தை பார்க்க முடிகிறது. மேலும் படத்தின் அப்டேட் கேட்டும் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.