லோகேஷ் கனகராஜ் கதையையே வேணாம்னு சொல்லிட்டாரா.. அப்ப அவர் என்னதான் எதிர்பார்க்கிறாரு?

ஐதராபாத் : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நாளைய தினம் விக்ரம் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

உலகநாயகன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் 100 சதவிகிதம் லோகேஷ் கனகராஜ் படமாக உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர் என மூன்று முக்கியமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் லோகேஷ்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

50 சதவிகித சமரசம்

50 சதவிகித சமரசம்

இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் முடிந்தபின்பே கைதி படம் வெளியானதாகவும், அதன்பின்பே விஜய்க்கு தன்னை குறித்த ஒரு புரிதல் ஏற்பட்டதாகவும் முன்னதாக ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்க்காக ஒருசில காம்ப்ரமைஸ்களை செய்ததாகவும் இது 50 சதவிகிதம் மட்டுமே தன்னுடைய படமாக அமைந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

100 சதவிகித லோகேஷ் படம்

100 சதவிகித லோகேஷ் படம்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தன்னுடைய 4வது படத்திலேயே உலகநாயகனை இயக்கும் வாய்ப்பு லோகேஷிற்கு கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்தப் படம் 100 சதவிகிதம் லோகேஷின் படமாக அமைந்துள்ளதாக கமல்ஹாசனே தெரிவித்துள்ளார்.

மிரட்டலான ட்ரெயிலர்

மிரட்டலான ட்ரெயிலர்

இந்தப் படம் நாளைய தினம் ரிலீசாக உள்ளது. படத்தின் டீசர், போஸ்டர்கள், ட்ரெயிலர், பாடல்கள் அனைத்தும் மிரட்டலாக அமைந்துள்ளது. படத்தின் புக்கிங் துவங்கப்பட்டவுடனே ரசிகர்கள் உடனடியாக இந்தப் படத்தை அதிகளவில் புக் செய்துள்ளனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்று அனைத்து தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மீண்டும் விஜய் படம்

மீண்டும் விஜய் படம்

அடுத்தப் படத்திலும் நடிகர் விஜய்யை இயக்கவுள்ளார் லோகேஷ். இந்தப் படத்தில் எந்தவிதமான சமரசமும் செய்துக் கொள்ளாமல் 100 சதவிகிதம் தன்னுடைய படமாகவே கொடுக்கவுள்ளதாகவும் அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமரசம் செய்துக் கொள்ளாத உறுதி

சமரசம் செய்துக் கொள்ளாத உறுதி

இந்தப்படம் தளபதி 67ஆக அமையவுள்ளது. தற்போது தளபதி 66ல் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இதனிடையே நான்கு படங்களை மட்டுமே இயக்கி சர்வதேச அளவில் தனது திறமையை நிரூபித்துள்ளார் லோகேஷ். எந்த நடிகருக்காகவும் தான் சமரசம் செய்துக் கொள்ள மாட்டேன் என்ற இவரது உறுதி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

லோகேஷை நிராகரித்த பிரபாஸ்

லோகேஷை நிராகரித்த பிரபாஸ்

இந்நிலையில் முன்னதாக இவரது கதையை வேண்டாம் என்று கூறிய முன்னணி நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம்வரும் நடிகர் பிரபாசிடம் லோகேஷ் ஒரு கதையை சொன்னதாகவும் ஆனால் அவர் அந்தக் கதையை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாய்ப்பை தவறவிட்ட பிரபாஸ்

வாய்ப்பை தவறவிட்ட பிரபாஸ்

கதையை கேட்ட பிரபாஸ், இந்தக் கதை வழக்கமான கதையாக உள்ளதாகவும் வேறு ஏதாவது பிரம்மாண்டமான கதை இருந்தால் பேசலாம் என்றும் கூறியதாக தெரிகிறது. லோகேஷ் தனது கதைகள் சிம்பிளாக இருந்தாலும் திரைக்கதையில் பிரம்மாண்டத்தை காட்டுவார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் நல்ல வாய்ப்பை பிரபாஸ் இழந்ததாக கூறலாம்.

தோல்வியடைந்த ராதே ஷ்யாம்

தோல்வியடைந்த ராதே ஷ்யாம்

சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியிருந்தார் பூஜா ஹெக்டே. முன் ஜென்மத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்திற்கு சிறப்பான பிரமோஷன் கொடுக்கப்பட்டது. ஆயினும் படம் ப்ளாப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X