»   »  சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் உருக்கமான பேச்சைக் கேட்டு பாராட்டிய பிரபல நடிகர்!

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் உருக்கமான பேச்சைக் கேட்டு பாராட்டிய பிரபல நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூப்பர் சிங்கர் ராஜலட்சிமியை பாராட்டிய நடிகர் மாதவன்!-வீடியோ

சென்னை : விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜலட்சுமி.

இவரும் இவரது கணவர் செந்தில் கணேஷும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடி வருகிறார்கள். நாட்டுபுற பாடல்கள் தான் இவர்களது ஸ்பெஷல்.

சமீபத்திய நிகழ்ச்சியில், ராஜலட்சுமி தனது குடும்பப் பின்னணி பற்றிப் பேச, அவரை ட்விட்டரில் பாராட்டியுள்ளார் நடிகர் மாதவன்.

ராஜலட்சுமி

ராஜலட்சுமி

கிராமியப் பாடல்கள் தான் தமிழர்களின் அடையாளம். கிராமியப் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நிலையில் தற்போது விஜய் டிவி-யில் கிராமியப் பாடல்களை மட்டுமே பாடி அசத்தி வருபவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடி.

ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

அழகான குரலில் பாடி தமிழுக்கும், கலைகளுக்கும் பெரும் சேர்த்து வருகிறார்கள் இவர்கள். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலக்கி வரும் இவர்களுக்கென பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.

குடும்ப பின்னணி

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தன்னுடைய அப்பா நெசவுத் தொழிலை செய்துதான் குடும்பத்தை காப்பாற்றினார் என்றார். என் அப்பாவிற்குப்பின் இந்தத் தொழில் அழிந்துவிடும் போல இருக்கிறது. எங்களுக்கு அந்தத் தொழில் தெரியாது, மிகவும் கஷ்டப்பட்டு தான் என் அப்பா எங்களை வளர்த்தார் எனப் பேசினார்.

பரிசு

பரிசு

அதோடு, இந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமி கைத்தறி நெசவாளர்களைப் பற்றிய கிராமியப் பாடலைப் பாடினார். பின் கைத்தறி மூலமாக நெய்யப்பட்ட புடவைகளை அனுராதா மற்றும் ஸ்வேதா மோகனுக்கு கொடுக்க ஆசைப்படுவதாக கூறி அவர்களுக்கு புடவைகள் கொடுத்தார்.

மாதவன் பாராட்டு

தற்போது நடிகர் மாதவன் ராஜலட்சுமியின் திறமையை பார்த்துவிட்டு எளிமை, அற்புதம், பெருமையாக இருக்கிறது. இது தான் தமிழ்நாடு. இப்படியான உலகத்தை தான் பார்க்க விரும்புகிறேன் என ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

English summary
Rajalakshmi and her husband Senthil ganesh are participated in super singer program. They sing folk songs in this program. Recently Actor madhavan praised Rajalakshmi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil