சின்னத்திரை தம்பதி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை…போலீசார் தீவிர விசாரணை!
சென்னை: பிரபல சின்னத்திரை தம்பதிகளான லதா ராவ், ராஜ் கமல் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் ராஜ் கமல். இவர் நவீன சரஸ்வதி சபதம், லிங்கா, மேல்நாட்டு மருமகன், கசட தபற உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்தராகம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் ராஜ் கமல். அவர் நடிகை லதா ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராஜ்கமல்- லதா ராவ்: வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலுமே மிகப்பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் ராஜ்கமல் மற்றும் லதா ராவ் தம்பதியினர். இந்த ஜோடிகள் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பல ஆண்டு காலமாக சீரியல்களில் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தனி ஸ்டைல்: இவர்கள் இருவரும் காதலித்த நாள் தொடங்கி திருமணம் ஆகி குழந்தைகள் பெற்றும் இன்னும் அதே அன்புடனும் பாசத்துடனும் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சி,போட்டோ ஷூட் என எதுவாக இருந்தாலும் இருவரும் ஒரே நிறத்தில் தான் உடை அணிந்து வருவது இவர்களின் தனி ஸ்டைல். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
பிம்மாண்ட வீடு: அண்மையில் லட்சக்கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமான வீட்டை கட்டினார்கள். இந்த வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், தம்பி ராமையா என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த வீட்டை சினிமா சூட்டிகிற்கு விட பார்த்து பார்த்து கட்டியதாக இருவரும் ஒரு பேட்டியில் கூறியிருந்தனர். பல சீரியல்கள் இந்த வீட்டில் தான் எடுக்கப்பட்டு வருகின்றன.
பூட்டை உடைத்து கொள்ளை: இந்த நிலையில் இந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த டிவி திருடு போயுள்ளதாக மதுரவாயல் காவல்நிலையத்தில் ராஜ்கமல் புகார் அளித்துள்ளார். வீட்டின் பின் பக்க கதவை உடைத்து டிவியை திருடிச்சென்றிருப்பதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புகாரின் பேரில், சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











