ஆபாசமாக பேசினார்கள்.. தனியாக அழைத்தனர்.. பிரபல நடிகையின் கண்ணீர் கதை!
சென்னை : பிரபல நடிகையான ஆமனி, பட வாய்ப்பு தேடி அலைந்த போது, பலர் தன்னிடம் ஆபாசமாக பேசி தனிமையில் அழைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட நடிகை ஆமனி, ஆததி, சந்தமாமா காதலு போன்ற படங்களில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்
மிஸ்டர் பெல்லம். பச்சனி சம்சாரம், அம்மா மோகுடு, பிரேமே நா பிராணம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஆமனி
சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஆமனி, அடுத்தடுத்து ஹிட்படங்களில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், விஷ்ணுவர்தன், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, கிருஷ்ணா, மம்முட்டி, அரவிந்த் சுவாமி, ஜெகபதி பாபு மற்றும் கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

ஹானஸ்ட் ராஜ் படத்தில்
தமிழில் விஜய்காந்த் நடித்த, ஹானஸ்ட் ராஜ் படத்தில் விஜய்காந்தின் மனைவியாக நடித்திருந்தார். தங்கமான தங்கச்சி, இதுதாண்டா சட்டம், முதல் சீதனம், புதையல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ஆடியன்சுக்கும் பிடித்த முகமாக மாறினார்.

நந்தி விருதை வென்றார்
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ள நடிகை ஆமனி, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும், மிஸ்டர் பெல்லம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும் வென்றுள்ளார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

ஆபாசமாக பேசினார்கள்
இந்நிலையில்,அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் நுழைய ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன், பல இடங்களில் வாய்ப்பை தேடி அலைந்தேன். அப்போது தான் சிலர் என்னிடம் ஆபாசமாக பேசினார்கள், கதை குறித்து பேச வேண்டும் என்று தனியாக அழைத்தார்கள். அந்த நேரம் என் மனம் உடைந்தே போனது.

புலம்பி அழுதேன்
படவாய்ப்புக்காக இதை எல்லாம் செய்ய வேண்டுமா என்று நான் அதிர்ச்சி அடைந்து அம்மாவிடம் புலம்பி அழுதேன். என் அம்மா எனக்கு ஆறுதல் கூறி, திறமை இருந்தால் போதும், மற்ற விஷயங்களை பற்றி கவலைப்படாதே என்று என்னை தேற்றி தைரியத்தை கொடுத்தார்கள். அம்மா கொடுத்த தைரியத்தால் தான் நான் இவ்வளவு தூரம் வெற்றி பெற முடிந்தது என்றார்.


Click it and Unblock the Notifications











