பொன்னியின் செல்வன் விறுவிறுப்பான படப்பிடிப்பு… ஐஸ்வர்யா ராய் நடித்த காட்சி படமானது !
சென்னை : பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு நடித்தார்.
இப்படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் ஒரு மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைவரும் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்கின்றனர் அங்கு இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இதையடுத்து பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

வரலாற்று நாவல்
வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இது இயக்குனர் மணிரத்னம் அவர்களின் கனவு திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சரத்குமார்,நாசர், பிரகாஷ் ராஜ்,பார்த்திபன், நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம்,ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா,ஷோபிதா துலிபலா, என ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

நடிகர் நடிகையர் விவரம்
இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத் தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வைணவ சாமியாரின் வேடத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராமும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி கதாபாத்திரத்திலும், த்ரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் இருவேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

படப்பிடிப்பில் இணைந்தார்
இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீராகி உள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு நடித்தார். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைவரும் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்கின்றனர் அங்கு இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இசை
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











