ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன்.. தெருத்தெருவாக சோப்பு விற்கும் பிரபல நடிகை !

சென்னை : சினிமாவில் படவாய்ப்பு இல்லாததால் பிரபல நடிகை சோப்பு விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.

90களில் சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும், காலப்போக்கில், பட வாய்ப்புகள் இல்லாததால் தனது யூடியூப் சேனலில் சமையல் செய்து அதை ஒளிபரப்பி வந்தார்.

தற்போது அதிலும், வருமானம் இல்லாததால் , சோப்பு விற்று வருவதாக கவலையுடன் அந்த நடிகை கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா தன்னுடைய அம்மாவை போலவே திரையுலகை தேர்வு செய்து 1989 ஆம் ஆண்டு, தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.. தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களை தேர்வு செய்து நடித்த இவரை, தமிழில் நியாயங்கள் ஜெயிக்கும் படத்தின் மூலம் இயக்குனர் சிவச்சந்திரன் அறிமுகப்படுத்தினார்.

எஜமான் திரைப்படம்

எஜமான் திரைப்படம்

இதையடுத்து, பாக்யராஜிற்கு ஜோடியாக ராசுகுட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சுமாரான வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, பல தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. அந்த படங்கள் அனைத்தும் தோல்வியை மட்டுமே சந்தித்தது. நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ஜோடியாக எஜமான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக் குவித்தது.

சவுண்டு சரோஜா

சவுண்டு சரோஜா

எஜமான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இவர் மிகவும் பிரபலமானார். இவர் ஹீரோயினாக மட்டும் இன்றி, குணச்சித்திர வேடங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். சூர்யா நடிப்பில் வெளியான ஆறு திரைப்படத்தில் சவுண்டு சரோஜா என்ற ரோலில் கனகச்சிதமாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா.

தொலைக்காட்சி தொடர்களில்

தொலைக்காட்சி தொடர்களில்

ஹவுஸ்ஃபுல், ஜனா, வேல், குமரன் சன் ஆப் மகாலட்சுமி, அபியும் நானும், என சில படங்களிலும், தென்றல், அழகுப்போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், இவர் சொந்தமாக யூடியூப் சேனலை தொடங்கி அதில், சவுண்டு சரோஜா மொழியில் விதவிதமான சமையல் செய்து ஒளிபரப்பி வந்தார்.

சோப்பு விற்கிறேன்

சோப்பு விற்கிறேன்

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஐஸ்வர்யா, தற்போது எந்த வாய்ப்புகளும் இல்லாததால், மோசமான நிலையில் இருக்கிறேன். வேலையில்லாததால் வருமானத்திற்காக எதையாவது செய்து ஆகவேண்டும் என்ற கட்டாயத்தால், தற்போது சோப்பு விற்பனை செய்து வருகிறேன். இதில் ஏதோ வருமானம் கிடைக்கிறது என்றார்.

Recommended Video

Rajkamal | Latha Rao | எங்க வீட்டு Bathroom கதை | Filmibeat Tamil
ஜாலியாக செய்கிறேன்.

ஜாலியாக செய்கிறேன்.

இந்த வேலையை நான் ஜாலியாக செய்து வருகிறேன். இப்போது எனக்கு கடன் இல்லை, வேறு எந்த பிரச்சனையும் இல்லை, நிம்மதியாக இருக்கிறேன். சோப்பு விற்பதை நினைத்து நான் வருத்தப்படவில்லை. எந்த வேலையாக இருந்தாலும் மன நிறைவுடன் செய்தால் அதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று அந்த பேட்டியில் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X