மன அழுத்தம்.. சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம்!
கொல்கத்தா : 21வயதே ஆன பெங்காலி நடிகை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நடிகை பிதிஷா டி மஜும்தார் ஒரு மாடல் ஆவார் இவர் வங்காள மொழித் திரைப்படங்களிலும், ஒரு சில விளம்பரங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஒரு குறும்படத்திலும் நடித்துள்ளார். பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்றாலும், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் பிதிஷா.

நடிகை பிதிஷா மஜும்தார்
இந்நிலையில்,கொல்கத்தா நகரின் நாகர் பஜார் பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் நடிகை பிதிஷா வசித்து வந்துள்ளார். நேற்று அவர் நீண்ட நேரமாக தொலைபேசியை எடுக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் வீட்டிற்கு வந்தனர். ஆனால், வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, நடிகை பிதிஷா மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

தற்கொலைக்கு முன் கடிதம்
இதையடுத்து, அவரின் உடலை மீட்ட போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, கடிதம் ஒன்று போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், பிதிஷா தனக்கு புற்றுநோய் இருப்பதால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காதலரிடம் விசாரணை
ஆனால், பிதிஷாவின் நெருங்கிய நண்பர்கள், பிதிஷாவுக்கு அனுபாப் என்ற காதலன் இருப்பதாகவும் இவர்கள் இருவரும் நீண்டகாலமாக உறவில் இருந்த நிலையில், காதலன் அனுபாப் மூன்று பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்த விஷயம் தெரிந்த பிதிஷா மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து காதலனிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி
சமீபத்தில் சீரியல் நடிகை பல்லவி தே தற்கொலை செய்து கொண்டது குறித்து 'என்னால் நம்பவே முடியவில்லை. பல்லவி மிகவும் தைரியமானவள் என தனது சமூக வலைப்பக்கத்தில் நடிகை பிதிஷா பதிவிட்டிருந்தார். தற்போது அவரே தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











