Disco shanthi : அவர் மேல பைத்தியமா இருந்தேன்..டிஸ்கோ சாந்தி கண்ணீர் பேட்டி!
சென்னை : தென்னிந்திய சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை டிஸ்கோ சாந்தி தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
80 களில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் கவர்ச்சி நடனம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் டிஸ்கோ சாந்தி.
தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக ஐட்டம் பாடல்களில் தோன்றியதற்காக மிகவும் பிரபலமானவர்.

தமிழ் சினிமாவில் : நடிகை டிஸ்கோ சாந்தி தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில பிறந்தார் பிரபல நடிகர் சிஎல் ஆனந்தனின் மகளான சாந்திக்கு லலிதா குமாரி என்ற சகோதரியும் இருக்கிறார். சினிமாவில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சினிமாவிற்குள் நுழைந்த நடிகை டிஸ்கோ சாந்தி உதய கீதம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
ஐட்டம் பாடலகளில்: தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து ஐட்டம் பாடல்களில் கவர்ச்சியாக ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நடிகை சில்க் ஸ்மிதா அந்த படத்தில் இல்லை என்றால் அதில் நிச்சயம் டிஸ்கோ சாந்தி இருப்பார். படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த சாந்தி, 1996 ஆம் ஆண்டு தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நடிகரான ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு, குடும்பத்தை பொறுப்புடன் கவனித்து வந்தார்.
திடீர் மரணம் : இந்த தம்பதிக்கு, அக்ஷரா ஸ்ரீஹரி என்ற மகளும், ஷஷாங்க் ஸ்ரீஹரி, மேகம்ஷ் ஸ்ரீஹரி என்ற மகனும் உள்ளனர். இதில், அவரது மகள் அக்ஷரா ஸ்ரீஹரி நான்கு மாத குழந்தையாக இருந்தபோது இறந்துவிட்டார். டிஸ்கோ சாந்தியின் கணவர் 2013 ஆம் ஆண்டு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட தற்போது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.

பைத்தியமா இருந்தேன் : இந்நிலையில் நடிகை டிஸ்கோ சாந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியில், அதில் இத்தனை ஆண்டுகள் ஆன போதும் என் கணவர் இறப்பில் இருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை. கணவர், குழந்தைகள் தான் என் வாழ்க்கையாக இருந்தது, அவர் படப்பிடிப்புக்கு சென்றாலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு,சமைத்து எடுத்துக்கொண்டு அவருடன் தான் சேர்ந்து சாப்பிடுவேன் அப்படி அவர் மேல் பைத்தியமாக இருந்தேன்.
கண்ணீர் பேட்டி : அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கண், வாய் முழுவதும் ரத்தமாக இருந்தது, இதைப்பார்த்து நான் துடித்தே போனேன். அவர் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் நான் அவரின் நினைவுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று நடிகை டிஸ்கோ சாந்தி தனது கணவர் குறித்து கண்ணீருடன் கூறினார்.


Click it and Unblock the Notifications











