காதல் தோல்வி.. நம்ப வைத்து ஏமாற்றிய விளையாட்டு வீரர்.. 51 வயதிலும் முதிர்கன்னியாக வாழும் நடிகை!

சென்னை: பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான நக்மா, தனது திரையுலக வாழ்க்கையிலும், அரசியலிலும் தனக்கு என்று தனி இடத்தை பெற்று இருக்கிறார். ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக காதல், திருணம் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்துள்ளது. பல காதல் தோல்விகள், துரோகங்களை தாண்டி நடிகை நக்மா தற்போது வரை திருமணம் செய்து செய்யாமல் வலி நிறைந்த வாழ்க்கையை வாழ்த்து வருகிறார்.

"என்னவளே அடி என்னவளே" என்ற பாடலை கேட்கும் போதே, நக்மாவின் பால் போன்ற தேகமும், கிளர்ச்சியூட்டும் அழகும் தான் நம் கண் முன் வந்து போகும். அந்த வசீகரமான அழகிற்கு சொந்தக்காரி தான் நடிகை நக்மா. மும்பையை பூர்வீகமாக கொண்ட நக்மா டிசம்பர் 25ஆம் தேதி 1974 ஆம் தேதி பிறந்தார். இவரின் உண்மையான பெயர் நந்திதா. சீமா, அரவிந்த் மொரார்ஜி தம்பதிக்கு மகளாக பிரிந்தார். நக்மாவின் தாயார் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர், தந்தை இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து சீமா, அரவிந்தை பிரிந்து இரண்டாவதாக சந்தர் சதானாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர் தான் நடிகை ஜோதிகாவும் அவரின் சகோதரி ரோஷினியும்.

Nagma life story
Photo Credit:

நடிகை நக்மா: மும்பையில் பள்ளி படிப்பை முடித்த நக்மா,1994 ஆம் ஆண்டு சங்கரின் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காளி, போஜ்புரி, பஞ்சாப், மராத்தி ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பாட்ஷா திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாட்டி தொட்டி எங்கும் இவரது புகழ் ஓங்கியது. அதை தொடர்ந்து தமிழில் லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, பெரிய தம்பி, பிஸ்தா என அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார் நடிகை நக்மா.

சரத்குமாருடன் காதல்: இந்த காலகட்டத்தில் தான் சரத்குமாருடன் ஜானகி ராமன், அரவிந்தன் போன்ற படங்களில் நடித்த போது இருவரும் நெருங்கி பழகியதும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு. அது, சரத்குமாரின் மனைவி சாயாதேவியின் காதுக்கு செல்ல, என் கணவர் நக்மாவுடன் மிக நெருக்கமாக இருப்பாக என வெளிப்படையாகவே சாயதேவி பேசி இவர்களின் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு இருவரையும் பிரித்தார். அதன்பின் தமிழ்நாட்டை விட்டு மும்பைக்கு சென்ற நக்மா, தமிழ் படங்களை தவிர்த்துவிட்டு மற்ற மொழிப்படங்களில் நடித்து வந்தார்.

Nagma life story
Photo Credit:

திருமணத்தை மறுத்தார்: அப்போது தான், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உடன் பழகினார். 2000 ஆம் ஆண்டு இருவரும் சென்னையில் உள்ள ஒரு கோயிலில் ஒன்றாக இருக்கும் போட்டோ வெளியானது. இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக அப்போது ஊடகங்களில் போட்டோவுடன் செய்தி வெளிவந்தன. இதுகுறித்து பேசிய சவுரவ் கங்குலி, அது வெறும் வதந்தி, இருவரும் நல்ல நண்பர்கள் என்று வதந்திக்கு முட்டுக்கட்டை போட்டார். ஆனால், நக்மா, நாங்கள் ஒன்றாக வாழ்ந்தது உண்மை தான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், உங்களுக்கு திருமணமாகி ஏற்கனவே மனைவி இருக்கும் போது, எப்படி வேறு ஒருவருடன் உறவு வைத்துக்கொள்ள முடியும்? என்று கேட்டால் என்ன செய்வது? இதையெல்லாம் கருத்தில் வைத்துத்தான் கங்குலி மறுத்துவிட்டார் என ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். இந்த சலசலப்பால் கங்குலி நக்மா உடனான உறவுவை முறித்துக்கொண்டார்.

பிரிந்தனர்: அடுத்தடுத்த காதல் தோல்வியால் வேதனையில் இருந்த நக்மாவின் காதல் வாழ்க்கையில் இன்னொரு சர்ச்சைக்குரிய அத்தியாயமாக இருந்த ரவி கிஷனுடனான காதல் தான். 2006 ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து 'ஏக் அவுர் ஃபௌஜ்' படத்தில் நடித்தபோது, இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதலை இருவரும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். இருவரும் லிவ்டூ ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து வந்த போது, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதுமட்டுமில்லாமல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடனும் நக்மாவின் பெயர் இணைத்து பேசப்பட்டது.

பல ஏமாற்றம்: துரோகம், காதல் தோல்வியால்துவண்டு இருந்த நக்மா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது வரை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நக்மா, அண்மையில் அளித்த பேட்டியில்,
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். காதல் மற்றும் திருமணத்தின் மீது எனக்கு இன்னும் ஈர்ப்பு இருக்கிறது. ஆனால், ஒரு உறவு தேவை என்பதற்காக எந்த ஒரு உறவிலும் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று நக்மா தனது 51 வயதிலும் முதிர் கன்னியாக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X