மண்வாசனை ரேவதிக்கு இன்று பிறந்த நாள்..சமூகவலைத்தளங்களில் குவியும் வாழ்த்து !

சென்னை : தனது இயல்பான நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கொண்டு இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை ரேவதி

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ரேவதி பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் நம்மை ரசிக்க வைத்து வரும் இவருக்கு இன்று பிறந்தநாள்.

ஜூலை 8ஆம் தேதியான இன்று இவரது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

மனங்களில் மணம்மாறா

மனங்களில் மணம்மாறா

தமிழில் மண்வாசனையுடன் அறிமுகமாகி மக்களின் மனங்களில் மணம்மாறா கதாபாத்திரங்களின் மூலம் இன்றும் நிலைத்து வருபவர் நடிகை ரேவதி. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

புதுமைப்பெண்

புதுமைப்பெண்

தமிழில் ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ரேவதி இதுவரை மூன்று தேசிய விருதுகளை பெற்று கம்பீரமாக வலம் வருகிறார். பாரதிராஜாவுடன் முதல் முதலாக இணைந்த மண்வாசனை படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக புதுமைப்பெண் என்ற படத்தில் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார்.

இருவரும் இணைந்து

இருவரும் இணைந்து

இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் கார்த்திக் மற்றும் மோகன் இவர்களுடன் இணையும் படங்கள் மிகவும் ஸ்பெஷலாக பார்க்கப்பட்டன. நடிகர் கார்த்திக் உடன் இணைந்து கிழக்கு வாசல், தெய்வ வாக்கு என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்த ரேவதி முதன்முதலாக மோகன் மற்றும் கார்த்திக் என இருவரும் இணைந்து நடித்த மௌன ராகம் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்.

மௌன ராகம்

மௌன ராகம்

இவ்வாறு கார்த்திக் மற்றும் மோகனுடன் தனித்தனி படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரேவதி மௌன ராகம் என்ற படத்தில் காதலன் மற்றும் கணவர் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்து தேசிய விருது பட்டியலில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

படங்களை இயக்கினார்

படங்களை இயக்கினார்

இவ்வாறு தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனது முத்திரையை மறக்காமல் பதித்து வரும் ரேவதி இதுவரை மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். மேலும் நம் அனைவருக்கும் நடிகையாக மட்டுமே பரிச்சயமான ரேவதி ஓரிரு படங்களை இயக்கியும் இருக்கிறார். அதில் இவர் இயக்கிய மித்ர், மை ஃப்ரண்ட் என்ற திரைப்படம் சிறந்த ஆங்கில படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது.

அன்பை தொடர்ந்து

அன்பை தொடர்ந்து

இவ்வாறு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடித்து தமிழ் ரசிகர்களின் அன்பை தொடர்ந்து பெற்று வரும் ரேவதிக்கு இன்று பிறந்தநாள். ஜூலை 8ஆம் தேதியான இன்று இவர் தனது 54வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் மிக சந்தோஷமாக கொண்டாடி வருகிறார். மேலும் இவரது பிறந்த நாளுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X