LEO படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. என்ன காரணம்னு தெரியுமா?
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் பிரபல நடிகை நடிக்க மறுத்துள்ளார்.
கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் தற்போது விஜய்யின் 67வது படத்தை இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்திற்கு லியோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஆயுதபூஜையையொட்டி அக்டோபர் 18ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
விக்ரம் படத்தில் லோகேஷின் LCU பக்காவாக வொர்க் அவுட் ஆகி இருந்ததால், அனைவரின் பார்வையும் லியோ படத்தின் மீது உள்ளது. இப்படத்தில், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான், சான்டி,மேத்யூ ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்
லியோ படத்தின் பிரமோ வீடியோவில் நடிகர் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லீக்கில் ஒரு வயதான தோற்றத்தில் இருந்தார். இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், படக்குழுவோ எந்த ஒரு காட்சியும் இணையத்தில் லீக்காகிவிடக்கூடாது என சோஷியல் மீடியாவில் விளக்கெண்ணை ஊற்றி பார்த்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்தில் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிக்க மறுத்த நடிகை
இப்படி ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் லியோ படத்தில் இருக்கும் போது நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. லியோ படத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும், படத்தின் கதையை கேட்டுவிட்டு, கதையில் கதாநாயகிக்கு முக்கியம் இல்லை என கூறி, மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பலரும் லோகேஷ் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என தவம் கிடக்கும் நிலையில் சாய் பல்லவி நடிக்க மறுத்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் படத்தையும் மறுத்தார்
லியோ படம் மட்டுமில்லாமல், எச் வினோத் இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான துணிவு படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியை முதலில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அஜித்துடன் நடிக்கவும் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. நடிகை சாய் பல்லவி, கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் ஆர்வமாக இருப்பது தெளிவாக தெரிகிறது.

முக்கியமான கதாபாத்திரத்தில்
நடிகை சாய் பல்லவி தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் வெளியான விராட்ட பருவம், கார்கி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, சாய் பல்லவிக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க கமிட்டாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











