பச்சை பச்சையா கேட்பேன்.. சீமானுடன் நடிகை கஸ்தூரியை தொடர்புபடுத்தி பேசும் நடிகை.. அடுத்த ஆடியோ!

சென்னை: இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீது, பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடுத்த பிரபல நடிகை, அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானால் தான் 7 முறை கருக்கலைப்பு செய்து கொண்டேன் எனவும் கூறினார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. காதலித்தோம், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் என அந்த நடிகை கூறினார். இது மட்டும் இல்லாமல், சில வீடியோக்களையும் அவர் வெளியிட்டார்.

Seeman NTK Seeman Case

அப்படி இருக்கும்போது, இந்த வழக்கை விரைந்து முடித்து வைக்க வேண்டும் என சீமான் சார்பில் மனு அளிக்கப்பட்டது, இப்போது விசாரணை சூடு பிடித்து வருகிறது. காவல்துறை சீமானுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக சொல்லியும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு நடிகை அளித்துள்ள குரல் பதிவில் பல பகீர் கேள்விகளை முன் வைக்கிறார்.

Seeman NTK Seeman Case

அதாவது, " நான் சீமான் மீது குற்றச்சாட்டை கூறும்போது நாம் தமிழர் கட்சியினர், நடிகை கஸ்தூரி உட்பட பலரும் என்னை கொச்சையாக விமர்சித்தார்கள். இப்போது என்னிடம் இருக்கும் லிங்கை (Link) பார்க்கும்போது நடிகை கஸ்தூரியை நான் கொச்சை கொச்சையாக திருப்பிக் கேட்கவா? விருப்பப்பட்டு வந்தேன், விருப்பப்பட்டு வந்தேன் எனக் கூறினால் நான் என்ன விபச்சாரியா? நான் விருப்பப்பட்டு போனேன் என சீமான் தான் சொல்லிக்கொண்டு உள்ளார். ஆனால் நான் எந்த இடத்திலும் கூறவில்லை.

Seeman NTK Seeman Case

14 ஆண்டுகள் கண்ணீர்: இன்றைக்கு தனது குழந்தைகள் குறித்து பேசும் சீமான், அன்றைக்கு என் அக்கா வழக்கிற்காக போய் நின்றபோது அதைச் செய்து கொடுக்க முடியவில்லை. எனது முதல் புகாரில், நான் ஏமாந்ததைப்போல் எந்த பெண்ணும் ஏமாறக்கூடாது என குறிப்பிட்டுள்ளேன். நான் உயிருடன் இருப்பது என்பது இந்த யுத்தத்தை நடத்த கடவுள் எனக்கு போட்ட பிச்சை. வீரப்பன் மகள் உட்பட பலரும் அழுகிறார்கள். ஆனால் நாங்கள் 14 ஆண்டுகளாக அழுது கொண்டு உள்ளோம். எனது அம்மா இறந்தே விட்டார். அக்கா படுத்த படுக்கையாக உள்ளார்.

பச்சை பச்சையாக: போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக் கொள்கிறார், சீமான் சாமானியனாக இருந்திருந்தால் எனக்கு என்றைக்கோ நீதி கிடைத்திருக்கும். அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளின் போர்வைக்குள் போய் ஒளிந்து கொண்ட சீமானுக்கு அசிங்கமாக இல்லையா? சீமானை விட நான் பச்சை பச்சையா கேட்பேன். எனக்கு என்ன இனி உள்ளது? எல்லாம் இழந்து விட்டேன். எனக்கு எதற்காக ரூபாய் 50 ஆயிரம் கொடுத்தாய், நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறாய். நான் என்ன பிச்சக்காரியாகவா சீமானிடம் வந்தேன்?

Seeman NTK Seeman Case

கர்ப்பப்பை: காவல்துறை விசாரணைக்குப் பின்னர் எப்படி ஒத்துக் கொள்கிறார்? இப்போது சீமானுக்கு ஆதரவாக இருப்பவர்கள், நானும் சீமானும் குடும்பம் நடத்தும் போது எங்கே சென்றார்கள்? பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும், என ஒரு மனமாக நினைக்க வேண்டும். இனி சீமானை காப்பாற்ற யார் வந்து நின்றாலும் கடுமையாக விமர்ச்சிக்கப்படுவார்கள். 14 ஆண்டுகளாக ஒரு பெண்ணின் கண்ணீர். கருகலைப்புகளால் எனது கர்ப்பப்பையை நீக்க வேண்டிய நிலையில் இன்றைக்கு நான் உள்ளேன்.

Seeman NTK Seeman Case

தலைவர் ஆக கூடாது: ஆனாலும் நான் போராடிக் கொண்டு உள்ளேன். நான் நினைத்தால் சீமானுடன் சமரசமாக போய்விட முடியும், ஆனாலும் நான் போராடுவது தமிழ்நாடு மக்களுக்கு இதில் தெளிவாக தெரிய வேண்டும். சீமானைப் போன்றவர்கள் தலைவர்களாக ஆகக் கூடாது என்பதற்காக போராடிக்கொண்டு உள்ளேன்" என பேசியுள்ளார். நடிகையின் இந்த குரல் பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு சீமான் தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு உள்ளார்கள்.

More from Filmibeat

Read more about: seeman சீமான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X